• Latest News

    July 06, 2016

    செய்திகளை சுட்டு பத்திரிகையில் வெளியிடும் ஊடகவியலாளர்களுக்கு இனி ஆப்பு

    ( அஸ்ஹர் இப்றாஹிம்)
    இன்று( 6.7.2016) விடிவெள்ளி பத்திரிகையின் பின்பக்கம் சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்திற்கு புதிய சீருடை வழங்கும் நிகழ்வின் படம் வெளியிடப்பட்டுள்ளது.
    இது  மருதமுனை நிருபர்  தன்னை சிரேஸ்ட ஊடகவியலாளர் என அறிமுகப்படுத்தியுள்ள 28 வருடங்கள் ஊடகத்துறையில் அனுபவம் பெற்றவர் என தனக்கு தானே மகுடம் சூட்டிக் கொண்டவர் நிகழ்சி நடைபெற்ற இடத்திற்கு சமூகம் தராமல் இதனை சுட்டு தனது பெயரில் செய்தியினை பிரசுரிக்கச் செய்துள்ளார்.
    இந்த நிகழ்விற்கு செய்தி சேகரிக்க நானும் (36 வருடங்களுக்கு முன்னர் நானும் என் சக நண்பர்களும் இணைந்து உருவாக்கிய கழகம் இது ) சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.வை.அமீர் என்னும் ஊடகவியலாளருமே சென்றிருந்தோம். காதர் என்பவரை இந்த Area விலும் காணவில்லை.
    இப்படியாக வீட்டிலிருந்து கொண்டு face book இல் வெளியிடப்படும் படங்களையும் செய்திகளையும் சுட்டு பத்திரிகையில் வெளியிட்டு சம்பாதிப்பதென்பது ஊடகத்துறைக்கே இழிவான ஒரு நிகழ்வாகும். இவர் மட்டுமல்ல இன்னும் சிலர் உள்ளனர் அவர்கள் மிக விரைவில் வெளிக்காட்டப்படுவார்கள்.
    இவர் போததற்கு திகரனுக்கும் இச் செய்தியினை அனுப்பி வைத்துள்ளார்.ஆனால் தினகரன் ஆசிரியர் பீடம் செய்தியை வெளியிடுவதற்கு முன்னர் காதர் என்பவர்  அந்த இடத்தில் செய்தி சேகரிக்க வந்தாரா என்று கேட்டு தெளிவு பெற்ற பின்னர் என மாளிகைக்காடு குறூப் நிருபர் என்ற பெயரில் மட்டும் அந்த( 4.7.2016)  செய்தி வந்தது.
    இதே வேளை இன்றைய தமிழ் மிரர் பத்திரிகையின் உள்ளுர்களம் பகுதியில் நிகழ்வில் கலந்து கொள்ளாத இன்னுமொரு ஊடகவியலாளரும் குறிப்பிட்ட செய்தி வெளியிட்டுள்ளார் என்பதனை செய்திகளை இணையத்தளங்களில் இருந்து சுட்டு ஏனைய பத்திரிகையில் வெளியிடும் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.
    இது பல நாட்களாக பொறுத்திருந்து பொறுமையை மீறியே இதை வெளியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.இது விடயமாக சம்பந்தப்பட்ட பத்திரிகை ஆசிரியர்களுக்கும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரச் செயலாளருக்கும் அறிவித்துள்ளேன்.


    06.07.2016
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: செய்திகளை சுட்டு பத்திரிகையில் வெளியிடும் ஊடகவியலாளர்களுக்கு இனி ஆப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top