• Latest News

    July 06, 2016

    இன ஒற்றுமை வேண்டி பிரார்த்திப்போம் - மேல்மாகாண சபை உறுப்பினர் அர்ஷாட் நிஷாமுடீன்

    ( நஸீஹா ஹஸன்)
    இலங்கைத் திருநாட்டில் வாழ்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்களிடையே ஒற்றுமை  புரிந்துணர்வு ஏற்பட வேண்டும் என இத்திருநாளில் முஸ்லிம்கள் துஆ பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாட் நிஷாமுடீன் தெரிவித்துள்ளார்.
    நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள விசேட செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 
    அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
    அல்லாஹ்வுக்காக பல தியாகங்களைச் செய்து 30 நாட்கள் பசியுடன் நோன்பிருந்து இன்று பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் உள்ளங்களுக்கும் எனது இனிய பெருநாள் வாழ்த்துக்கள். ஈத்முபாரக்!
    இத்திருநாளில் சமூகத்தின் எழுச்சிக்காக முஸ்லிம்கள் பிரார்த்தனைகளில் ஈடுபடும் அதேவேளை, சிங்கள  தமிழ்  கிறிஸ்தவ உறவை மேம்படுத்திக்கொள்வதற்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும். 
    நாடு அபிவிருத்தியடைய வேண்டுமாயின் நிலையான சமாதானம் இருக்க வேண்டும். அதில் இன ஒற்றுமை என்பது விசேட அம்சமாகும்.
    இஸ்லாம்   இன ஒற்றுமையை வலியுறுத்துகின்றது. அதற்கான நாளாக இன்றைய தினத்தை அமைத்துக் கொள்வோம்.  என அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இன ஒற்றுமை வேண்டி பிரார்த்திப்போம் - மேல்மாகாண சபை உறுப்பினர் அர்ஷாட் நிஷாமுடீன் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top