• Latest News

    July 04, 2016

    சகவாழ்வும் நல்லிணக்கமும் இல்லாத நிலையில் நல்லாட்சி மலர முடியாது - அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத்

    அலரி மாளி­கையில் இடம்­பெறும் இப்தார் நிகழ்­வுக்கு முஸ்லிம் சமூ­கத்தின் பிர­தி­நி­தி­களை அழைத்துக் கௌர­வப்­ப­டுத்­திய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அவர்­க­ளுக்கு முஸ்லிம் சமூ­கத்தின் சார்பில் நன்றி சொல்ல கட­மைப்­பட்­டுள்ளோம். அர­சாங்கம் முன்­னெ­டுக்­கின்ற நல்­லாட்­சியை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான திட்­டங்­களும் நாட்டின் பொரு­ளா­தார மேம்­பாட்டை இலக்­காகக் கொண்ட திட்­டங்­களும் ஏனைய காத்­தி­ர­மான முன்­னெ­டுப்­பு­களும் வெற்றி பெற இந்த சந்­தர்ப்­பத்தில் பிரார்த்­திப்­போ­மாக!

     ஒரு தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்­புதல் (Nation building) என்­கின்­ற­போது அந்த தேசத்தின் பொரு­ளா­தாரம், கல்வி, சுகா­தாரம், பௌதிக  வளங்கள், உட்­கட்­ட­மைப்பு… முத­லான அம்­சங்­களைக் கட்­டி­யெ­ழுப்­பு­வது என பொது­வாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. இவை­யெல்லாம் முக்­கி­யமாக இருப்­பது போல தேசத்தின் குடி­மக்­களை ஆன்­மிக ரீதி­யாக, ஒழுக்க ரீதி­யாக, பண்­பாட்டு ரீதி­யாகக் கட்­டி­யெ­ழுப்­பு­வது மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாகும். ஆன்­மி­கமும் ஒழுக்­கமும் பண்­பாடும் உயர்ந்த நிலையில் இருக்­கின்­ற­போதே ஒரு நாட்டில் நல்­லாட்சி (good governance) மலர்­வது சாத்­தி­ய­மாகும்.

     சம­கால உலகில் நாம் எதிர்­நோக்­கு­கின்ற பிரச்­சி­னை­க­ளுக்குப் பின்னால் இருக்­கின்ற பிர­தா­ன­மான காரணம் ஆன்­மிக பண்­பாட்டு வீழ்ச்­சியே (Moral crisis).அந்த வகையில் எமது நாட்டில் நல்­லாட்சி மலர வேண்­டு­மாயின் எமது நாட்டு மக்கள் நல்­லாட்­சிக்குத் தகு­தி­யுள்ள, பண்­பா­டுள்ள, ஒழுக்­க­முள்ள, நேர்­மை­யுள்ள, நீதி­யுள்ள மக்­க­ளாக உரு­வாக்­கப்­பட வேண்டும்.

    அந்த வகையில் ஆன்­மிகம் முக்­கி­யத்­துவம் பெறு­கி­றது. மதமும் ஆன்­மி­கமும் இல்­லாத இடத்­திலே பண்­பாட்டை, ஒழுக்­கத்தை எதிர்­பார்க்க முடி­யாது. பண்­பா­டற்ற நிலையில் மதம் இருக்­கின்­ற­ போது அந்த மதம் பய­னற்­ற­தாக இருப்­பது போல மதம் இல்­லாத நிலையில் பண்­பாட்டை வளர்க்க முடி­யாது என்­பதை உல­கமே ஏற்று அங்­கீ­க­ரிக்­கி­றது.

     எனவே, மதம், ஆன்­மிகம், பண்­பாடு என்­ப­வற்றை வளர்க்­கின்ற ஒரு கடப்­பாடு அர­சுக்கும் மத தலை­வர்­க­ளுக்கும் சமூகத் தலை­வர்­க­ளுக்கும் இருக்­கி­றது. உண்­மையில் எமது நாடு ஆன்­மி­கத்­துக்கும் ஒழுக்கப் பண்­பா­டு­க­ளுக்கும் முக்­கி­யத்­துவம் கொடுக்­கின்ற நாடு. இந்த வகையில் மனித விழு­மி­யங்­களை, பொது­வான விழு­மி­யங்­களைக் கட்­டி­யெ­ழுப்­பு­கின்ற கடப்­பாடு அர­சுக்கும் எம் அனை­வ­ருக்கும் இருக்­கி­றது.

     குறிப்­பாக இலங்கை போன்ற பல்­லி­னங்­களும் பல சம­யத்­த­வர்­களும் வாழ்­கின்ற ஒரு நாட்­டிலே சமூக நல்­லி­ணக்­கத்தை, சக­வாழ்வைக் கட்­டி­யெ­ழுப்பும் வகையில் பல்­வேறு நிகழ்ச்சித் திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டிய அவ­சி­யமும் தேவையும் இருக்­கி­றது. அந்த வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அவர்கள் நாட்டில் சமூக நல்­லி­ணக்­கத்­தையும் சக­வாழ்­வையும் கட்­டி­யெ­ழுப்பும் நோக்கில் “அந்தர் ஆக­மிக உப­தே­சக மண்­ட­லய” எனும் பெயரில் ஒரு சமய நல்­லி­ணக்க குழு­வொன்றை அண்­மையில் அமைத்­தி­ருப்­பது பாராட்­டுக்­கு­ரி­யது.

    அவ்­வாறே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அவர்­களும் இந்த நாட்டில் சமூக நல்­லி­ணக்­கத்­தையும் சக­வாழ்­வையும் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­வதை நாம் அறிவோம். இத்­த­கைய மனித விழு­மி­யங்­க­ளையும் ஆன்­மிக விழு­மி­யங்­க­ளையும் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான முயற்­சி­களில் மும்­மு­ர­மாக ஈடு­பட வேண்­டிய ஒரு கால கட்டம் இது. 

    ஒரு நாட்டு மக்­களின் எதிர்­பார்ப்­புகள் எப்­ப­டி­யா­னவை என்­பது பற்றி அல்­குர்ஆன் பின்­வ­ரு­மாறு சொல்­கி­றது. “இவ் இல்­லத்தின் (கஃபாவின்) இறை­வனை அவர்கள் வணங்­கு­வார்­க­ளாக. அவனே, அவர்­க­ளுக்கு பசிக்கு உண­வ­ளித்தான்; மேலும் அவர்­க­ளுக்கு அச்­சத்­தி­லி­ருந்தும் அப­ய­ம­ளித்தான்.” (106: 3-4)பசி, பட்­டி­னி­யற்ற, அச்­ச­மற்ற நிம்­ம­தி­யான, சுதந்­தி­ர­மான வாழ்வே மனி­தர்­க­ளுக்குத் தேவை. இவைதான் ஒரு நாட்டு மக்கள் எதிர்­பார்க்கும் அடிப்­ப­டை­யான விட­யங்கள்.

     நல்­லாட்­சியில், ஒரு சிறந்த ஆட்­சியில் மக்­களின் பொரு­ளா­தாரப் பிரச்­சி­னைக்­கான தீர்­வுகள் வழங்­கப்­பட வேண்டும். அவர்­க­ளு­டைய பாது­காப்பு உத்­த­ர­வா­தப்­ப­டுத்­தப்­பட வேண்டும். நீதி வழங்­கப்­பட வேண்டும். அவர்கள் நிம்­ம­தி­யாக, சமா­தா­ன­மாக, அச்­ச­மின்றி வாழ்­கின்ற நிலை உரு­வாக்­கப்­பட வேண்டும். உண்­மையில் ரழமான் நோன்பின் பிர­தா­ன­மான நோக்­கமும் இதுதான். ஒரு பக்கம் ஆன்­மிக ரீதி­யான மறு­ம­லர்ச்­சியை உரு­வாக்­கு­வது (Spiritual awakening).

    மறு­பக்கம் ஒவ்­வொரு தனி மனி­த­னையும் குடும்­பத்­தையும் சமூ­கத்­தையும் பண்­பாட்டு ரீதி­யாக கட்­டி­யெ­ழுப்­பு­வது (Social reform). இந்த நாட்­டிலே வாழ்­கின்ற மக்­களை நாட்­டுக்கு விசு­வா­ச­முள்ள பிர­ஜை­க­ளாக வாழ்­வ­தற்குத் தேவை­யான வழி­காட்­டல்­களை அற்­பு­த­மாக வழங்­கு­கி­றது இந்த ரமழான்.

     இறை­வனும், இறுதித் தூதர் நபி (ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம்) அவர்­களும் கூறு­வதைப் பாருங்கள்:
     "நம்­பிக்கை கொண்­ட­வர்­களே! நீங்கள் இறை­வனை அஞ்சி (பய­பக்­தி­யுடன்) நடந்துக் கொள்­வ­தற்­காக, உங்­க­ளுக்கு முன்­னி­ருந்­த­வர்கள் மீது கட­மை­யாக்கப் பட்­டி­ருந்­த­துபோல் உங்கள் மீதும் நோன்பு கட­மை­யாக்­கப்­பட்­டுள்­ளது." (அல்­குர்ஆன் 2: 183)
    நோன்பின் உன்­ன­த­மான நோக்­கத்தை அல்லாஹ் தனது திரு­ம­றை­யிலே இவ்­வாறு இரத்­தினச் சுருக்­க­மா­கவும் மிக அழ­கா­கவும் சொல்லிக் காட்­டு­கிறான்.

    நபி (ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறி­னார்கள்:
    "யார் பொய்­யான பேச்­சு­க­ளையும் பொய்­யான நட­வ­டிக்­கை­க­ளையும் விட­வில்­லையோ அவர் பசித்­தி­ருப்­ப­திலோ, தாகித்­தி­ருப்­ப­திலோ அல்­லாஹ்­வுக்கு எந்த தேவை­யு­மில்லை." (அல்­பு­காரி, திர்­மிதி, இப்­னு­மாஜா) “நோன்பு நோற்கும் பல­ருக்கு அவர்­களின் நோன்பில் இருந்து பசி தாகம் தவிர வேறெ­துவும் கிடைப்­ப­தில்லை. இரவில் விழித்து வணங்கும் பல­ருக்கு விழித்­தி­ருப்­பதைத் தவிர வேறு எதுவும் கிடைப்­ப­தில்லை.” (தாரமி)

    அந்த வகையில் மிகவும் பண்­பா­டான, பக்­கு­வ­மான, நல்­லொ­ழுக்­க­முள்ள, தேசப்­பற்­றுள்ள, சட்­டங்­க­ளுக்கு கட்­டுப்­பட்டு வாழ்­கின்ற, எப்­போதும் ஒழுங்கைப் பேணு­கின்ற ஒரு சமூகமாக இந்த சமூகம் மாற வேண்டும் என்பது ரமழானின் முக்கிய இலக்கு என்பதை கவனத்திற் கொண்டு செயற்படுவோமாக!

    எனவே, அந்த வகையில் அல்லாஹுத் தஆலா இந்த சபையை அங்கீகரிப்பானாக! இங்கு பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துக்களுக்கூடாக சிறந்த மாற்றங்களை ஏற்படுத்துவானாக! நாட்டில் நிம்மதியையும் அமைதியையும் தருவானாக! நாட்டில் வாழ்கின்ற இனங்களுக்கும் சமயத்தவர்களுக்கு மத்தியிலும் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்ப உதவி செய்வானாக!

    நாட்டின் நலன்களுக்காக, நல்லாட்சிக்காக உழைக்கின்ற அனைவருக்கும் அல்லாஹ் தேக ஆரோக்கியத்தை வழங்குவானாக! உலகத்திற்கு ஒரு முன்மாதிரி நாடாக எமது நாட்டை ஆக்கி அருள் புரிவானாக!
    04.07.2016
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சகவாழ்வும் நல்லிணக்கமும் இல்லாத நிலையில் நல்லாட்சி மலர முடியாது - அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top