• Latest News

    July 04, 2016

    ஷங்கர் ஒரு இயக்குனரே இல்லை - அக்ஷய்குமார்

    இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று அனைவராலும் சொல்லப்படும் ஷங்கர் தற்போது ரஜினியை வைத்து ‘2.ஓ’ என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார். மேலும், ஏமி ஜாக்சனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    இந்நிலையில், ஷங்கர் ஒரு இயக்குனரே இல்லை என்று சமீபத்திய் பேட்டி ஒன்றில் அக்ஷய்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ஷங்கர் ஒரு இயக்குனரே கிடையாது. அவர் ஒரு விஞ்ஞானியைப் போல் இருக்கிறார். ஒவ்வொரு படத்துக்கு முன்பும் அந்த படம் எப்படி அமைய வேண்டும் என்பதை மாதக்கணக்கில் ஆராய்ச்சி செய்கிறார். அவரை ஒரு இயக்குனர் என்ற கூறுவதைவிட் விஞ்ஞானி என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று கூறினார்.

    மேலும் ரஜினி குறித்து அவர் கூறும்போது, பிறக்கும்போதே ஸ்டைலோடு பிறந்தவர் ரஜினி. சினிமா மட்டுமல்லாது அவருடைய நிஜ வாழ்விலும், ஒவ்வொரு அசைவிலும் ஒரு ஸ்டைல் இருக்கும். அவர் ஒரு மிக எளிமையான மற்றும் மனிதநேயம் மிக்கவர் என்று கூறினார்.
    04.07.2016
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஷங்கர் ஒரு இயக்குனரே இல்லை - அக்ஷய்குமார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top