• Latest News

    November 05, 2016

    ஒரு ரூபா உழைப்பில் 80 சதம் கடன்

    இதுவரையில் இலங்கை பெற்றுக்கொண்டுள்ள கடன் தொகையை கருத்திற்கொண்டால், உழைக்கும் ஒவ்வொரு ரூபாயிலும் 80 சதத்தை கடனாகச் செலுத்தவேண்டி ஏற்பட்டுள்ளதென, நிதி இராஜாங்க அமைச்சர் லக்‌ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.   
    பொருளாதாரம் தொடர்பில் எந்த அரசியல்வாதி கருத்துத் தெரிவித்தாலும், அடுத்த வருடத்தில் மாத்திரம், 4.4 பில்லியன் டொலர்களை, கடன் தவணையாகச் செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.   
    கொழும்பில் நேற்று வியாழக்கிழமை (03) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது தொடர்ந்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, எதிர்வரும் 2017ஆம் ஆண்டின் வரவு - செலவுத்திட்டப் பற்றாக்குறை 4.7 ஆகக் காணப்படுவதாகவும் இதற்கான நிதியைத் திரட்டவேண்டிய நிலைமைக்கு, அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதென்றும் மேலும் குறிப்பிட்டார். -Tm- 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஒரு ரூபா உழைப்பில் 80 சதம் கடன் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top