(றியாஸ் எம் இஸ்மாயில்)
பொத்துவில்
உப கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்களின்
பற்றாக்குறையை கவனத்தில் கொண்டு கிழக்கு மாகாண சபையினால் ஆசிரியர்களை
நியமித்து வருகின்றது. இருந்தும் பொத்துவில் பாடசாலைகளில் பாடரீதியான
ஆசிரியர் பற்றாக்குறை தற்போது நிலவி வருகின்றது. இதனை கவனத்தில் கொண்டு
கிழக்கு மாகாண சபை பாடரீதியாக தேவையான ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்களை
மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரஸின் இளைஞர் விவகார வேலைவாய்ப்புத்துறைச் செயலாளருமான ஏ.எல்.தவம்
தெரிவித்தார்.
அம்பாறை
மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் மாவட்ட செயலத்தில் இன்று(07.11.2016)
நடைபெற்ற போது இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு
இங்கு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
பொத்துவில்
பிரதேசத்திற்கு தற்போது உப கல்வி வலயம் செயற்படுகின்றது அங்கு தனியான
கல்வி வலயம் அமையப் பெற வேண்டும். இவ்விடயம் தொர்பாக கிழக்கு மாகாண
சபையிலும் கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை வாரியத்திலும் தீர்மானம்
எடுக்கப்பட்டுள்ளது.இத்தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.தனியான கல்வி
வலயம் அமைய இந்த மாவட்ட அபிவிருத்திக்குழு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டும் என இதன் போது தனது கோரிக்கையினை முன்வைத்தார்.
இவ்விடயம் தொடர்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுவின் சிபாரிசு குறித்த அமைச்சுக்கு அனுப்பிவைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
0 comments:
Post a Comment