• Latest News

    June 06, 2017

    கட்டார் அமீர் குவைத்திற்கு அவசர பயணம்! காரணம் யாது?

    (ஸாஜிதீன் மஹ்ரூப் - ஸஹ்வி)
    நேற்றைய தினம் எல்லா ஊடகங்கள், மனிதர்களின் வாயில் உலாவிய செய்திதான் சவூதி மற்றும் அதன் கூட்டணி நாடுகள் கட்டார் நாட்டுடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்தது என்ற செய்தி. அதிலும் குறிப்பாக இலங்கை ஊடகங்களையும் இச்செய்தி ஆட்கொண்டது. பலரும் பலவாறாக உண்மைக்குப் புறம்பாக வழமையாக சவூதி அரேபியாவை திட்டித் தீர்க்கின்றவர்களுக்கு இம்முறையும் அவர்களின் வாய்க்கு அவல் கிடைத்தது போல்; கண்டது கேட்டதை எல்லாம் எழுதித்தள்ளி இணையத்தளங்கள், வட்சப் போன்ற சமூக வலைத்தளங்களில் உலாவ விட்டுள்ளனர்.

    ஒரு சில நியாயமான காரணங்களுக்காக சவூதியும் அதன் கூட்டணி நாடுகளான குறிப்பாக துபாய், பஹ்ரைன் போன்ற நாடுகள் அவர்களின் எல்லை பாதுகாப்புக்கு இரகசியமான முறையில் அச்சுறுத்தல் விடுத்தமை, அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சிகள் செய்வதற்கு மக்களை தூண்டுவதற்க்கான முயற்சிகளை மேற்கொண்டமை, பயங்கராவாத அமைப்புகளுக்கு தொடர்ச்சியாக உதவி ஒத்தாசைகள் செய்து அவர்களுக்கு இடங்கொடுத்து அவர்களை பாதுகாத்து வருகின்றமை, மற்றும் ஊடகங்கள் வாயிலாக அதிலும் குறிப்பாக அல்ஜஸீரா போன்ற ஊடகங்கள் அந்த நாடுகளை தூற்றிவருகின்றமை போன்ற காரணங்களால் தனது இராஜதந்திர உறவுகளை தற்காலிகமாக முறித்துக்கொண்டுள்ளன.

    சவூதி அரேபியா தனது தரை, கடல், ஆகாயமார்க்க பயணப் போக்குவரத்துகளை துண்டிக்குமாறும் மற்றும் கட்டார் நாட்டின் தூதரகத்தை மூடிவிட்டு அதன் இராஜதந்திரிகளை நாட்டை விட்டு வெளியருமாறு பணிப்புரைவிடுத்துள்ளது, அதேபோன்று ஏனைய வளைகுடா நாடுகளான துபாய், பஹ்ரைன் போன்ற நாடுகளும் தமது எதிர்ப்புக்களை வெளிக்காட்டியுள்ளது.

    வளைகுடா நாடுகளோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டதுதான் இந்த விரிசல்களுக்கு பிரதானமான காரணமாக கருதப்படுகிறது. குறிப்பாக ஈரான், இஸ்ரேல் போன்ற இஸ்லாமிய விரோதே நாடுகளோடு ஆதரவுப் போக்கை கையாண்டாமை, அவர்களின் ஜனாதிபதிகளுக்கு வெற்றி பெற்றமைக்காக வாழ்த்துக்கள் தெரிவித்தமை, இதன் காரணமாக இஸ்ரேல் அவர்களின் தூதரகத்தை கட்டாரில் நிறுவியது. இதனால் கட்டாரும் அதனை ஒரு தனி நாடக அங்கீகரித்தது. இவ்வாறு தொடர்ச்சியாக ஆதரவுப்போக்கை கையாண்டமை இப்படியானதொரு மோசமான நிலைமைக்கு வித்திட்டது எனலாம்.

    இதன் காரணமாக கட்டார் பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளது. அதுவும் ஒரு சிறிய நாடு தனது தேவைகளை ஏனைய அயல் நாடுகளோடு சேர்ந்து தான் நிறைவேற்றிக்கொள்கிறது. குறிப்பாக வளைகுடா நாடுகள் உதவிபுரிகின்றன. இதன் மூலமாக சவூதி போன்ற ஏனைய நாடுகளும் பொருளாதார வர்த்தக ரீதியாக பாரிய பின்னடைவை எதிர்நோக்கும் அபாயமுள்ளது.

    இவ்வாறனதொரு நிலைமை 2014ம் ஆண்டு கூட ஏற்பட்டது அதிலும் தக்க காரணங்களுக்காக சவூதி போன்ற ஏனைய நாடுகள் தனது உறவுகளை முறித்துக்கொண்டன. இந்த இரண்டு நாடுகளுக்கிடையில் குவைத் சமரசம் பேசி அதில் வெற்றியும் கண்டது. அதேபோன்று மேலும் ஒரு சமாதான முயற்சியில் குவைத்தை ஈடுபட வைக்க கட்டார் அமீர் நேற்றைய தினமே குவைத் சென்றடைந்தார் மேலும் அங்கு சமாதான நகர்வுகள் இடம்பெற்றுவருகின்றன. அதன் அமைவாக துபாய் அமீரும் சவூதி அரேபிய ஜித்தா நகருக்கு வந்து அங்கும் இது தொடர்பான சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. நிலைமை இவ்வாறு இருக்க ஈரான் இதனை வரவேற்று பேசியுள்ளது இது ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்த தக்க தருணம் என்று கட்டாரை உட்சாகமூட்டியுள்ளது. இது ஒரு கயமைத்தனம்,

    ஈரான் தொடர்ந்தும் முஸ்லிம் நாடுகளை பிரிக்க எத்தனிக்கிறது. சவுதியை தனிமைப்படுத்தி அதனை சூழ ஷீஆ கொள்கையை விதைக்க முயற்சிக்கிறது. அதில் வெற்றியும் கண்டுவருகிறது.

    நாடுகளை பொறுத்து அதன் அரசியல் நகர்வுகள் வேறுபாடும். ஒரு சில காரணிகளை வைத்து மாத்திரம் அதனை எடைபோட முடியாது. இவ்வாறான நியாயமான காரணிகளை புறந்தள்ளி வைத்துவிட்டு சமூக ஊடகங்களில் பகைமையை கொட்டித்தீர்ப்பது நியாயமன்று. ஒரு சிலர் பலஸ்தீனில் ஹமாஸ் இயக்கம் போராடுவதை, பாலஸ்தீனின் நிலைமைகளை அல்ஜஸீரா செய்தி நிறுவனம் வெளிக்கொண்டு வருவதை, அதேபோன்று கட்டார் நாடு யூஸுப் அல்கர்லாவிற்கு அடைக்கலம் கொடுத்ததை சவூதி அரேபியாவுக்கு பொறுக்க முடியவில்லை என்றல்லாம் கதையளக்கிறார்கள், உண்மையில் ஹமாஸ் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு, யூஸுப் அல்கர்லாவி இஸ்லாத்திற்கு மாற்றமான இஹ்வானிய நச்சுக்கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பிக்கொண்டிருக்கிறார். இதுதான் உண்மையான காரணிகளாகும்.

    இந்நிலைமை இன்னும் மோசமடையாமல் இருக்க அல்லாஹ் உதவி புரிவனாக... யாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்... ரமலான் மாதத்தில் இருக்கிறோம், நாவையும் கரங்களையும் பேணி தமது நோன்புகளை பூரணமாக்குவோமாக...
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கட்டார் அமீர் குவைத்திற்கு அவசர பயணம்! காரணம் யாது? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top