இரும்பு கம்பியை நெருப்பில் காய்ச்சி இரண்டு குழந்தைகளுக்கு சூடு வைத்து காயப்படுத்திய அட்டாளைச்சேனை பெண்ணுக்கு ஈராண்டுகால கடூழிய சிறைதண்டனை வழங்கப்பட்டது.
இரண்டு குழந்தைகளை சூடு வைத்து காயப்படுத்திய அட்டாளைச்சேனை பெண்ணுக்கு கல்முனை மேல் நீதிமன்றம் ஈராண்டு கால கடூழிய சிறை தண்டனையையும் ஒவ்வொரு சிறுவர்களுக்கும் இழைக்கப்பட்ட குற்றத்திற்காக 20 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் ஒவ்வொரு சிறுவருக்கும் 2 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா நஷ்டயீடும் வழங்க வேண்டுமென தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த இரண்டு குழந்தைகளும் தனது கணவருடைய முன்னைய மனைவியின் உடையவர்கள் ஆவர். பத்து வயது சிறுமிக்கு 11 தீ காயங்கள் உடம்பில் இருந்ததாகவும் எட்டு வயது சிறுமியின் உடம்பில் 10 தீ காயங்கள் இருந்ததாகவும் சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியமையை அடுத்து கல்முனை மேல் நீதிமன்ற நீதிபரி நவரட்ன மாரசிங்க இந்த தீர்ப்பை வழங்கினார். நம்பிக்கையின் அடிப்படையில் வளர்ப்பு தாயிடம் இருந்து பிள்ளைகள் இருவரையும் கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டினை குறித்த பெண் ஒப்புக்கொண்டார். குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணுக்கு 19 வயதுடைய பெண் பிள்ளை ஒருவரும் ஐந்து வயது சிறுவனும் இருப்பதால் கட்டாய சிறை தண்டனை வழங்காமல் எச்சரிக்கை அடிப்படையிலும் சமூகத்திற்கு படிப்பினையாக அமைவதற்கும் எதிரிக்கு விதிக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறை தண்டனையை 15 வருடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட தண்டனையாக நீதிபதி அறிவித்தார்.

0 comments:
Post a Comment