சிம்பாப்வே இராணுவம் அந்நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. சிம்பாப்வேயின் பல பகுதிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அரச தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையமான இஷட் பி.சி நிறுவனத்திற்குள் அத்துமீறி புகுந்து அதன் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. இவ்வாறு புகுந்த இராணுவத்தினர் குற்றவாளிகளை குறிவைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்படும் குற்றச்சாட்டுக்களையும் இராணுவம்
மறுத்துள்ளது. இதேவேளை சிம்பாப்வேயின் தலைநகரான ஹராரேயில் துப்பாக்கி வேட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இன்று தலைநகரை இராணுவ பீறங்கிகள் சுற்றி வளைததன. இதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தற்போது சிம்பாப்வேயில் நிலவும் குழப்பகரமான அரசியல் சூழ்நிலையில் நாட்டை மீட்பதற்காக இராணுவத்தின் தலையீடு தேவையான அந்நாட்டு இராணுவ தளபதி கொன்ஸ்டன் டினோ ,ச்சிவன்கோ எச்சரித்துள்ளார். ஆளுங்கட்சியான சானு பிஎப் கட்சி. இராணுவ தளபதியை தேசத்துரோகியாக அறிவித்துள்ள நிலையில் சிம்பாப்வேயில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி ரொபட் முகாபேவுக்கு சவால் விடுக்கும் வகையில் இராணுவ தளபதி ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தினார்.
சிம்பாப்வேயின் உப ஜனாதிபதி எமர்சன் நன்கக்வா பதவி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி முகாபே தனது மனைவி கிரேஸ் முகாபேயை உப ஜனாதிபதியாக நியமிக்கலாமென பரவிய வதந்தியை தொடர்ந்தே அந்நாட்டில் அரசியல் ஸ்தீரமின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment