30 வருடகாலம் பழைமை வாய்ந்த இலஞ்ச ஊழல் சட்டம் திருத்தி அமைக்கப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் சரத் ஜயமான்ன இவ்வாறு குறிப்பிட்டார் .
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இதில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிக்க முனையும் நபர்களுக்கான வழிவகைகளை முற்றாக இல்லாதுசெய்வதே தமது நோக்கமாகும்.
சட்டத்தில் சேர்க்க வேண்டிய திருத்தங்கள் பற்றி கல்விமான்கள் குழுவின் ஊடாக கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றன. அடுத்த சில மாதங்களுக்குள் திருத்தங்களை பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

0 comments:
Post a Comment