- யூ.கே. காலித்தீன் -
திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பான முன்னோடி அங்குராப்பன நிகழ்வு
அண்மையில் கல்முனை மாநகர சபை கேட்போர் கூடத்தில் மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் நடைபெற்றது.
நாட்டில் நெருக்கடியாகவுள்ள திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதில் பாரிய
சாவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏட்பட்டுள்ளது. அந்த வைகையில் கல்முனை மாநகர
சபையும் விதிவிலக்கள்ள
இதன் முன்னோடியாக “UCAN” Youth Creative Action Network அமைப்பானது முதன் முதலாக மரம் நடுகை மற்றும் திண்மக் கழிவுகளை பயனுள்ளவைகளாக மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டபொழுது
திண்மக்கழிவு முகாமைத்துவம் ஒரு பாறிய
பிரச்சினையாக “UCAN” அமைப்பினால் அடையாளம் காணப்பட்டு அவ் அமைப்பின் உறுப்பினரான
சாந்தமருது அர்சாத் ஆரிப் இது தொடர்பான தீர்வினை முன்வைத்து நாடளவியரீதில் நடாத்தப்பட்ட
போட்டிகளில் பங்குபற்றி வெற்றியும் ஈட்டினார் அதன் ஒரு தீர்வாக Mobile Appன் உதவியுடனான செயத்திட்டதினை Idea Greek நிறுவனத்துடன் இணைந்து செயற்படுத்தப்பட்டது.
அவரது இத்திட்டத்தின் முதற்கட்டமாக கல்முனை மாநகர சபையுடன் இணைந்து நடைமுறைப்படுத்தும்
நோக்கில் Mobile Appன் ஒன்றின் மூலமாக குப்பை சேகரிக்கும் வண்டியில்
பொருத்தி குறித்த வீதிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்கின்ற
தகவல்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் இலகுவாக இனங்கண்டு வீதிகளில் கொட்டப்படும்
கழிவுகளினால் ஏற்படும் அசோகரியங்களை தவிர்த்து சிறந்த சூழலை உறுவாக்கி
திடகாத்திரமான சமூகத்தை உருவாக்கலாம் எனவும் விளங்கப்படுத்தி பரிட்சாத்திய ஒத்திகையும்
செய்துகாட்டபட்டு முகாமைத்துவம் சம்பந்தமாக பொதுமக்களுக்கு விளிப்புணர்வு வழங்க
வேண்டியது அவசியத்தினையும் அமைப்பினரினால் எடுத்துக்காட்டப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்...
திண்மக் கழிவுகளை சேகரித்து கொட்டுவதற்கான எமக்கென நிரந்தர இடமின்மையினால் பல அசோகரியங்களை
எதிர்நோக்குவதாகவும் தற்போது தற்காலியமாக சாய்ந்தமருது பொது மைதானத்தில்
கொட்டப்பட்டு மண் நிரப்பப்பட்டு வருகின்றது. கடந்த காலங்களிலும் நட்பிட்டிமுனை மைதானத்தில்
கொட்டப்பட்டு இன்று அவ் மைதானம் சிறந்த மைதானமாக காணப்படுவதுடன் சிறந்த
வீரர்களையும் உறுவாக்கி வருகின்றது. அதேபோன்றுதான் சாய்ந்தமருது மைதானமும் ஒரு காலத்தில்
மிளிரும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.
தொடந்து கருத்து தெரிவித்த ஆணையாளர்
திண்மக்கழிவு என்றால் என்ன?
திண்மக்கழிவு என்பது நாளாந்த வாழ்க்கைச் செயற்பாடுகளிலிருந்து
உருவாகும் பொருளாதார பெறுமதியற்ற திண்மப்பொருட்கள் என
விபரிக்கப்படுகின்றது. அதாவது வீடுகள், வைத்தியசாலைகள், வர்த்தக வியாபார, கைத்தொழில் மற்றும் விவசாய செயற்பாடுகளினால் மட்டுமன்றி பொதுத்துறைகளாலும் வெளியேற்றப்படுகின்ற திரவமல்லாத கழிவு திண்மக்கழிவு என வரையறுக்கப்படுகின்றது. திண்மக்கழிவானது உணவுக்கழிவுகள், கட்டட
நிர்மாணக்கழிவு, தொழிற்சாலைக்கழிவு, கடதாசி, உலோகங்கள், பிளாஸ்டிக் கண்ணாடி முதலானவற்றையும், பொதி செய்வதனால்
உண்டாகும் கழிவுகள் போன்ற பல்வேறுபட்ட வித்தியாசமான பொருட்களினை
உள்ளடக்குகின்றது.
திண்மக்கழிவுகளானது நாட்டுக்கு நாடும், வீட்டுக்கு வீடும், தொழிற்சாலைக்கு தொழிற்சாலையும் வேறுபடுகின்றது.
சிலவேளைகளில் குறிப்பிட்ட சில பொருட்கள் குறித்த நாட்டினில் அல்லது தொழிற்சாலையினால்
அல்லது நபரினால் கழிவுகளாகக் கருதப்படலாம்.
எமது பிரதேசத்தில் கடதாசி, தேங்காய்சிரட்டை, பிளாஸ்ரிக் என்பனவற்றை திண்மக்கழிவுகளாக கழிக்கின்றார்கள். உண்மையில் இவை
பெறுமதியுள்ள வளங்களாகும். உகந்த முகாமைத்துவத்தின் ஊடாக இப்பொருட்களிலிருந்து
பல நன்மைகளினை பெற்றுக்கொள்ளலாம். எமது மாநகர சபையும் திண்மக் கழிவுகளை தரம்
பிரித்து சேதனப் பசளைகளாக மாற்றி விற்பனை செய்து வருகின்றோம். இப்பசளைகளை பூங்காக்கள், தெருக்கள், வீதிகள்
போன்றவற்றை அழகுபடுத்துவதற்காகவும் தற்பொழுது வயல் நிலங்களுக்கூட வாங்கி பயணப்படுத்தி
உச்சபயனை அடைந்திருக்கின்றார்கள்.
திண்மக்கழிவுகளால்
உருவாக்கப்படும் சுற்றாடல் பிரச்சினைகள்:
வளி மாசடைதல், நீர் மாசடைதல், மண் மாசடைதல், சுகாதாரப்
பிரச்சினைகள் உயிரினப் பல்லினத்துவத்தின் மீதான சேதங்கள் இயற்கை காட்சிகளின் அழிவு
சமூகப் பொருளாதார பிரச்சினைகள் திண்மக்கழிவுகளால்
உருவாக்கப்படும் பிரச்சினைகளில் வளி மாசடைதல் ஒரு முக்கியமான பிரச்சினையாகும்.
பல்வேறுபட்ட நுண்ணுயிர்களால் திண்மக்கழிவுகள் பிரிந்தழிகைக்கு உள்ளாக்கப்படுகின்றன.
இச்செயற்ப்பாடுகளின் போது காற்றின்றிய நுண்ணங்கிகளின் செயற்பாட்டினால்
பல்வேறுவகையான இரசாயன வாயுக்கள் உருவாக்கப்படுகின்றன. இவ்வாயுக்கள்
வளிமண்டலத்தில் ஒன்றுடன் ஒன்று கலந்து துர்நாற்றத்தை ஏற்ப்படுத்துகின்றன. இவ்வாறு
துர்நாற்றம் உருவாகும் காரணத்தினால் அவ்விடப்பரப்பில் வாழும்
வதிவிடவாசிகளுக்கு தொல்லைகள் ஏற்படுத்தப்படுகின்றன. இதனால் கழிவுகள்
கழிக்கப்படும் இடங்களினைத் தெரிவு செய்தல் இலகுவான நோக்காக இருக்காது.
திண்மக்கழிவுகள் காற்றின்றிய நுண்ணங்கிகளின் செயற்ப்பாட்டிற்கு உட்படும்போது
உருவாகும் மெதேன் வாயுவானது பூகோள வெப்பமுறலில் அதிக தாக்கத்தை
ஏற்படுத்துவது அறியப்பட்டுள்ளது.
திண்மக்கழிவு முகாமைத்துவச் செயற்பாடுகளின் போது உருவாகும் தூசுகளாலும்
வளி மாசடைவு ஏற்படுகின்றது. குறிப்பாக திண்மக்கழிவுகளின் காவுகையின் போதும், கழிவகற்றலின்
போதும் தூசு துணிக்கைகள் பரம்பலடைகின்றது. இதனால் சுவாச சம்பந்தமான நோய்கள்
ஏற்படுத்தப்படுகின்றன. குறிப்பாக கைத்தொழில் கழிவுகள் கழிவகற்றலுக்கு
அகப்படும்போது உருவாகும் தூசுகளால் தீராத சுவாச நோய்கள் உருவாக்கப்படலாம்.
திண்மக்கழிவுகள் எரிக்கப்படும்போது உருவாகும் பல இரசாயன கூறுகளானவை மனிதனுக்கு
அதிகளவு தீமையை ஏற்ப்படுத்துகின்றன. திண்மக்கழிவுகள் காற்றின்றிய நுண்ணங்கிகளின் செயற்பாட்டிற்கு உட்படும்போது
உருவாகும் மெதேன் வாயுவானது பல சந்தர்ப்பங்களில் தீப்பற்றக்கூடியதாக
இருக்கலாம். பிளாஸ்ரிக் உள்ளடங்கலாக எல்லா திண்மக்கழிவு பொருட்களும் பல நிலைகளில்
எரிதலுக்கு உட்படுத்தப்படலாம். இதனால் உயர்ந்த சுற்றாடல் மாசடைதல் நிலைமைகள்
உருவாக்கப்படலாம்.
நீர் மாசடைதல்:
திண்மக்கழிவுகளால் உருவாக்கப்படும் மற்றுமொரு முக்கியமான பிரச்சினை நீர்
மாசடைதலாகும். எமது நாட்டில் உள்ள வடிகாலமைப்புத் தொகுதியானது பல
வழிகளில் தடுக்கப்பட்டுள்ளது. அதாவது பொலித்தீன் பைகள், தேங்காய் மட்டைகள், ஏனையவை போன்றன
வடிகாலமைப்பினுள் சென்று வடிகாலமைப்புத் தொகுதியைத் தடுக்கின்றன.
வடிகான்களை எவ்வளவுதான் துப்பறவு செய்தாலும் மக்கள் மத்தியில் போதிய
ஒத்துழைப்பு வழங்குவதில் அசமந்தமாக இருப்பது கவளையளிகின்றது. இவ்வாறு
தடுக்கப்பட்டுள்ள வடிநீரானது நுளம்புகள், பறவைகள், எலிகள் மற்றும்
குப்பைகள் கொட்டப்படும் இடங்களுடன் தொடர்புபட்டு வாழுகின்ற ஏனைய விலங்குகளின்
இனப்பெருக்க இடங்களாகச் செயற்படுகின்றன. கிணறுகளும் வடிகால்வாய் நீரும்
அவற்றினுள் கழிவுகள் கொட்டப்படுவதன் மூலம் மாசுபடுகின்றன. இதனால்
உயிரியல் ஒட்சிசன் தேவை இரசாயன ஒட்சிசன் தேவை மிக அதிகளவில் காணப்படுகின்றது. திரவக் கழிவுகளால் குடிநீர் தொற்றாக்கலுக்குள்ளாக்கப்படு வதன் மூலம் பல சுகாதாரப் பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன. இதனாலேயே நச்சுத்தன்மையான திண்மக்கழிவுகள் கொட்டப்படுவதன் மூலம் மேலும் தீவிரமான சுற்றாடல் பிரச்சினைகள் ஏற்ப்படுகின்றன.
சுகாதாரப்பிரச்சினைகள்:
திண்மக்கழிவுகளால் உருவாக்கப்படும் மற்றுமொரு முக்கியமான பிரச்சினை சுகாதார
ரீதியான பிரச்சினையாகும். திண்மக்கழிவுகளுடன் பல சுகாதாரப் பிரச்சினைகள்
தொடர்புபட்டுள்ளன. திண்மக்கழிவுகளுடன் தங்களுடைய வாழ்க்கை வட்டத்தை
நெருங்கிய முறையில் பேணுகின்ற ஈக்கள், நுளம்புகள், கரப்பான்
பூச்சிகள், எலிகள் போன்றவற்றினால் வேறுபட்ட வகைக்குரிய
நோய்கள் பரப்பப்படுகின்றன. அதாவது டெங்கு, மலேரியா, மூளைக்காய்ச்சல், பைலேரியா போன்ற
நோய்கள் இவ்வங்கிகளால் பரப்பப்படுகின்றன.
திண்மக்கழிவுகளால் உருவாக்கப்படும் மற்றுமொரு முக்கியமான சுற்றாடல்
பிரச்சினை சமூகப் பொருளாதாரப் பிரச்சினையாகும். இந்த வகையில் வாழும் சுற்றாடல்
துப்பரவற்றதாகவும், நிம்மதியற்றதாகவும் காணப்படுகின்றது. இதனால் நாளாந்த
வாழ்க்கை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் கழிவகற்றலுக்கான
செலவு, சுகாதார சேவைகளுக்கான செலவுகள் போன்ற பொருளாதார ரீதியான பிரச்சினைகள் தோன்றுகின்றன.
இதனை நிபர்த்தி செய்ய போதிய வலப் பற்றாக்குறை காணப்படுகின்றது எதிர்காலத்தில் அமையப்போகின்ற வட்டார முறையின் மூலம் அபிவிருத்தி
செய்து இம் மாநகரத்தினை சிறந்த மாநகரமாக மாற்றலாம் என்கின்ற நம்பிக்கை இருக்கின்றது
எனவும் கூறினார்.
முன்னோடி அங்குராப்பன நிகழ்வில் கல்முனை
மாநகர சபை பொறியியலாளர் எஸ். சர்வானந்தா, கல்முனை
மாநகர சபை உத்தியோகத்தர்கள் இலங்கை தென்
கிழக்கு பொறியியல் பீட விரிவுரையாளர் ஏ.ஏம். அஸ்லம் சஜா மற்றும் யுகேன் அமைப்பின் உத்தியோகத்தர்கள்
என பலரும் கலந்து கொண்டனர்.





0 comments:
Post a Comment