• Latest News

    December 22, 2017

    கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் ஓரளவு மழைபெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம்

    நாட்டின் மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி ,மாத்தறை மாவட்டங்களிலும் குறிப்பாக பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
    கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் ஓரளவு மழைபெய்யும்.

    வடமாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை , மொனறாகல ,மாத்தறை மாவட்டங்களில் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

    மட்டக்களப்பிலிருந்து ஹம்பாந்தோட்டை ,காலி ஊடாக கொழும்புவரையிலான கடற்கரையோர பிரதேசங்கிளல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஓரளவு பெய்யும்.

    பெரும்பாலான கடற்கரையோர பிரதேசங்களில் மாலை மற்றும் இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

    இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இடிமின்னலிலிருந்த பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் ஓரளவு மழைபெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top