மேயர் பதவிக்காக முஸ்லிம்களை அடகு வைக்கும் ஆசாத் சாலி முன்னெடுத்துள்ளதாக பானதுறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் குறிப்பிட்டுள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
கொழும்பு மாநகர சபைக்கு சு.க சார்பாக அஸாத்சாலி மேயர் வேட்பாளராக களமிறங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக அவர் அரசுக்கு அதி உச்ச ஆதரவுப் போக்கை கடைப்பிடித்திருந்தார்.கிந்தோட்டை சம்பவத்தின் போதான தவறுகளை கூட அவர் முஸ்லிம்கள் மீது போட்டு, முஸ்லிம்களை பெரும் இக்கட்டில் தள்ளியிருந்தார். இதன் பின்னணியில் ஏதாவது இருக்கும் என பலராலும் பேசப்பட்டது. இப்போது பார்த்தால் மேயராக முன்மொழியப்பட்டுள்ளார்.
ஒருவர் ஒரு கட்சிக்கு விசுவாசமாக இருக்கும் போது தான், அக் கட்சி அவருக்கு மேயர் பதவியை வழங்க முன்வரும். இதன் மூலம் சு.க இவருக்கு கால் கட்டு போட்டுள்ளது. இவரால் எப்படி முஸ்லிம் சமூகத்துக்கு ஆதரவாக போராட முடியும்? இருந்தாலும் ஏதாவது மைக் கிடைத்தால் இவரை அடிக்க தியாகி வேறு யாரும் இருக்க முடியாது. இவர் முஸ்லிம் சமூகத்தை அடமானம் வைத்தது இந்த பதவிக்காகவே.
இம்முறை கொழும்பு மாநகர சபையை கூட்டு எதிர்க்கட்சியினர் கைப்பற்றுவர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. கொழும்பு மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பேணிய கொழும்பின் அழகை இவ்வாட்சியாளர்கள் பாதுகாக்காது சிதைத்தது போன்ற வெறியில் உள்ளனர். இவ்வருடம் கூட்டு எதிர்க்கட்சியினர் கொழும்பில் நடாத்திய மே தின கூட்டத்துக்கு திரண்டிருந்த மக்கள் எண்ணிக்கை இதற்குக் பெரும் சான்றாகும். அது மாத்திரமன்றி கூட்டு எதிர்க்கட்சி சார்பாக மேயர் வேட்பாளராக பிரபலமான முஸ்லிம் ஒருவரே தேர்தல் கேட்கவுமுள்ளார்.
அவ்வாறில்லாது போனாலும் கொழும்பு மாநகர சபையை ஒரு போதும் சு.க கைப்பற்றக் கூடிய நிலை இல்லை. இது எல்லோரும் அறிந்த உண்மை. அசாத்சாலி முஸ்லிம்களை அடகு வைத்து பெற்ற இந்த விடயத்தில் கூட அவர் வெற்றி பெற முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment