• Latest News

    December 11, 2017

    இனவாதிகளை நாய்க் கூண்டில் அடைக்க வந்த அரசு,அவர்களை பாதுகாப்பாக வெளிநாடு அனுப்பி வைக்கின்றது.

    லங்கை நாட்டில் சில வருடங்களாக இனவாதம் உச்ச அளவில் உள்ளமை யாவரும் அறிந்ததே. இவ்வாறான சூழ் நிலையில் ஆட்சியமைத்த இவ்வாட்சியாளர்கள், இனங்களுக்கிடையிலான நல்லுறவை பிரதான கோசமாக முன்வைத்திருந்தார்கள். இருந்த போதிலும் இவ்வாட்சியாளர்கள் இனங்களுக்கிடையில் நல்லுறவை பேண எதனையும் செய்யும்.

    மாறாக, இவ்வாட்சியில் இனவாதம் முன்னரை விட அதிகம் துளிர் விட்டுள்ளது. முன்னரெல்லாம் இனவாத செயற்பாடுகளை யாராவது பிரபலமான மதத்தலைவர்கள், அரசியல் வாதிகள் தான் முன்னெடுப்பார்கள். ஆனால், இவ்வாட்சியில் சாதாரணமானவர்கள் கூட இனவாத செயற்பாடுகளை முன்னின்று செய்கின்றனர். அந்தளவு இவ்வாட்சியில் இனவாத செயற்பாடுகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன.

    அப்படியான ஒருவர் தான் டான் பிரசாத். அவர் மீது இனவாத வழக்குகள் அடுக்கப்பட்டுள்ளன. வழக்குகள் அடுக்கப்பட்டுள்ள ஒருவரால் நீதிமன்ற அனுமதி இன்றி வெளிநாடுகள் செல்ல முடியாது. இருந்த போதிலும் டான் பிரசாத் வெளிநாடு சென்றுள்ளார். நீதிமன்ற அனுமதி பெற்றதாகவும் தகவலில்லை. இது உயர் மட்ட அரச அங்கீரமின்றி நடந்தேறியிருக்க வாய்ப்பில்லை.

    இவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதால் இனவாத பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்றால் நாம் இதனை பெரிதாக எடுக்க வேண்டிய அவசியமில்லை. மிகவும் பாரதூரமான இனவாத செயற்பாடுகளை முன்னின்று செய்த ஒருவருக்கு, இப்படியான தப்பிக்கும் வாய்ப்புக்கள் வழங்கப்படுகையில், இது போன்று இனவாத செயற்பாடுகளை முன்னெடுப்போருக்கு நாமும் தப்பித்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் எழுந்து ஊக்கமளிப்பதாக அமைந்துவிடும். டான் பிரசாத் போன்றவர்களின் பேச்சுக்களால் இலங்கையில் இனவாதம் பரந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    இனவாதிகளை நாய்க் கூண்டில் அடைப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த இவ்வரசு, இப்படி இனவாதிகளை தப்பிக்க செய்வது எந்த வகையிலும் பொருத்தமானதல்ல.

    இப்படி சாதாரணமானவர்களை கூட தப்பிக்க விடுவது இவர்கள் இவ்வாட்சியாளர்களின் அங்கீகாரங்களோடு தான் களமிறக்கப்பட்டவர்கள் என்பதை அறிந்துகொள்ளச் செய்கிறது. இன்று இவ்வாட்சியில் இனவாத செயற்பாடுகளை முன்னெடுப்போருக்கு உயரிய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    அ அஹமட்,
    ஊடக செயலாளர்,
    முஸ்லிம் முற்போக்கு முன்னனி.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இனவாதிகளை நாய்க் கூண்டில் அடைக்க வந்த அரசு,அவர்களை பாதுகாப்பாக வெளிநாடு அனுப்பி வைக்கின்றது. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top