ஐக்கிய தேசியக் கட்சியும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியும் கள்ளர்கூட்டம் என்று கொழும்பு மாநகர சபை மேயர் பதவிக்கு போட்டியிட தயாராகிவரும் அதன் முன்னாள் மேயரான அசாத் சாலி குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தல் சட்டங்களை சரியான வகையில் கடைபிடித்தால் நீதியான, சுயாதீனமான தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கத் தயார் என்றும் அவர் கூறினார்.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தேர்தல்கால சட்டதிட்டங்கள் குறித்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் சந்திப்பு கொழும்பு – இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்றைய தினம் காலை நடைபெற்றது.
இதில் ஸ்ரீலங்காவின் பல்வேறு அரசியல் கட்சிகளின் செயலாளர்களும் கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்பின் பின்னர் அங்கிருந்து திரும்பிய கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயரான அசாத் சாலி ஊடகங்களுக்கு இந்த சந்திப்பு குறித்து தெளிவுபடுத்தினார்.
இதேவேளை இந்த சந்திப்பை நிறைவுசெய்து திரும்பிய ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், அமைச்சருமான அஜித் பி.பெரேரா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், இணைந்தாலும், பிரிந்தாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தோற்கடித்து தமது கட்சி அடுத்த தேர்தலில் வெற்றிபெறும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.

0 comments:
Post a Comment