முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் இடம்பெற்ற ஊழல்களை போன்றே மைத்திரி ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியிலும் ஊழல்கள் இடம்பெறுவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் மஹிந்த ராஜபக்சவை போன்று ஐக்கிய தேசியக் கட்சியும் மக்களுக்கு அநீதியான விடயங்களை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் கொழும்பில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலை மக்கள் சரியான முறையில் பயன்படுத்தி சிறந்த தலைவர்களை தெரிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

0 comments:
Post a Comment