• Latest News

    December 29, 2017

    கல்வித் தகைமையைக் காட்டுங்கள் - டிலான்

    குமார வெல்கம முடியுமானால் நாளைக்கு தனது கல்வித் தகைமையை கொண்டு வந்து காட்டட்டும் எனவும் அப்போது யார் ஜோகர், யார் கழுதை என்பது மக்களுக்குத் தெரியவரும் எனவும் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா சவால்விடுத்தார்.

    சூதுக் கார்ட் கூட்டத்தில் பல பெயர்களைக் கொண்ட கார்ட் அட்டைகள் உள்ளதாகவும், அதில் மேலதிகமாக இரு ஜோகர் கார்ட் அட்டைகள் காணப்படுவதாகவும் அந்த ஜோகர் போன்றவர்தான் டிலான் பெரேரா எனவும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்திருந்தார்.

    இதற்குப் பதிலளித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் டிலான் பெரேரா இன்று (29) இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.

    குமார வெல்கம என்னைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த இடம் கிரிந்த ஆகும். இந்த பிரதேசத்துக்கு மின்சாரத்தைக் கொடுத்தவன் நான் எனத் தெரிவித்த டிலான் அமைச்சர், இது குமார வெல்கமவுக்குத் தெரியாது எனவும் குறிப்பிட்டார். 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்வித் தகைமையைக் காட்டுங்கள் - டிலான் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top