- யு.எல்.எம். றியாஸ் -
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாளிகைக்காடு கரைவாகு வாய்க்கால் பிரதேசத்தில் இனம் தெரியாத சடலமொன்று இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் தொடர்பாக இதுவரை யாரும் உரிமை கோரவில்லை என சம்மாந்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச் சம்வம் தொடர்பாக சம்மாந்துறை நீதிவான் நீதி மன்ற பதில் நீதிபதி ஏ.எம். நசீல் குறித்த இடத்திற்கு விஜயம் செய்து சடலத்தை நேரில் பார்வையிட்டதுடன் சந்தேகத்திற்கு இடமான இச் சடலத்தை அம்பாறை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி விசேட சட்ட வைத்தியரின் ஆய்வு அறிக்கையினை பெறுமாறு பதில் நீதிபதி சம்மாந்துறை பொலிஸாருக்கு உத்தரவிட்டார்
இதேவேளை இச் சடலம் தொடர்பாக சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


0 comments:
Post a Comment