ஏ.டி.எம் அட்டையை பயன்படுத்தி கொள்ளையிட்ட இளைஞர் ஒருவர் தியத்தாலவ பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தனது பணப் பையில் இருந்த அட்டையை பயன்படுத்தி பல தடவைகள் சந்தேகநபர் பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக, குறித்த வர்த்தகர் தியத்தாலவ பொலிஸில் முறையிட்டுள்ளார். இதற்கமையவே குறித்த 23 வயதான ஹபுத்தலையைச் சேர்ந்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

0 comments:
Post a Comment