• Latest News

    December 29, 2017

    காதை பிடித்து வெளியே போடுவேன் - ஞானசார தேரர்

    லங்கை நாட்டின் உயரிய சபையான பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பல்லாயிரம் மக்களின் ஆதரவு பெற்ற  அமைச்சர் ஒருவரின் காதை பிடித்து வெளியே போடுவேன் என ஞானசார தேரர் கூறியிருப்பதானது முழு நாட்டையும் அவமதிக்கும் செயல் என பானதுறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்...

    இம் மாதம் 26ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட ஞானசார தேரர், அமைச்சர் றிஷாதை மிகக் கடுமையாக தாக்கி பேசி உள்ளார்.அவரது விமர்சனம் சரியானதா அல்லது பிழையானதா என்பதற்கு அப்பால், ஒரு அமைச்சரை விமர்சனம் செய்ய, அதற்கென்று தகுந்த முறை உள்ளது. அந்த முறையை முழுமையாக மீறியே ஞானசார தேரர் விமர்சனம் செய்துள்ளார்.

    பாராளுமன்றம் என்பது ஒரு நாட்டின் உயரிய சபை. அந்த சபையில் அங்கத்துவம் வகிப்பவர்கள் கௌரவத்துக்குரியவர்கள். அவர்கள் இலங்கை நாட்டின் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆதரவை பெற்றவர்கள். பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சாதாராண உறுப்பினரை விட, ஒரு அமைச்சர் இன்னும் மரியாதைக்குரியவர். அவர்களை “ காதை பிடித்து வெளியே போடுவேன் ” என கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இவர்களை அவமானப்படுத்துவது முழு நாட்டையும் அவமானப்படுத்துவது போன்றாகும். இந்த அவமானங்களை சந்திக்கும் மக்கள் பிரதிநிதிகள், எவ்வாறு மக்கள் முன்னிலையில் நெஞ்சை நிமிர்த்தி செயற்படுவார்கள்?

    இவ்வாட்சி காலப்பகுதியில்  ஞானசார தேரர் மித மிஞ்சிய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். யாரையும் அவர் மதிப்பதாகயில்லை. அந்தளவு கௌரவம் வழங்குமளவு இவர் நல்லவருமல்ல. இவரது செயற்பாடுகள் சிறந்தவைகளுமல்ல. குறைந்தது இந்த ஆட்சியானது கௌரவத்துக்குரிய  அமைச்சர்களின் மரியாதையையாவது தக்க வைத்துக்கொள்ளும் வகையில், இப்படி கருத்துக்களை வெளியிடும் ஞானசார தேரர் போன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் கூறுகிறோம்.

    முன்னதாக ரனில் விக்ரமசிங்கவை மிக மோசமாக திட்டித்தீர்த்த ஞானசாரரை வேடிக்கை பார்த்த நல்லாட்சி அரசு அமைச்சர்களை அவர் விமர்சிக்கும் போது அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என நாம் எதிர்பார்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: காதை பிடித்து வெளியே போடுவேன் - ஞானசார தேரர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top