இலங்கையின் மத்திய மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையகத்தின் முக்கியமான வீதிகளை பனி மூட்டங்கள் சூழ்ந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதன்படி நுவரெலியா–ஹட்டன் பிரதான வீதியிலும், நுவரெலியா-பதுளை பிரதான வீதியிலும் இன்று புதன் கிழமை காலை முதல் பனிமூட்டங்கள் நிரம்பிக் காணப்படுகின்றன. இவ்வாறு அதிகமான பனி மூட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டுநர்கள் பல்வேறுப்பட்ட சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
இதன் காரணத்தால் வாகன ஓட்டுநர்கள் தமது வாகனங்களை மிக அவதானத்துடன் செயற்படுத்த வேண்டும் என்பதோடு, ஓட்டுநர்கள் வாகனங்களில் மின்விளக்குகளை (ஹெட்லைட்) ஒளிரவிட்டு செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், மழை பெய்து வருவதனால் வீதியில் வழுக்கல் தன்மை ஏற்பட்டுள்ளதாகவும் அதுகுறித்து மிகுந்த பாதுகாப்புத் தன்மையுடன் வாகனங்களை ஓட்டுமாறும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

0 comments:
Post a Comment