• Latest News

    December 22, 2017

    ஷாருக் கானை பின்தள்ளி சல்மான் கான் முதலிடம்

    லகக் கோடீஸ்வரர்களைப் பட்டியலிடும் ‘போர்ப்ஸ்’ பத்திரிகை இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் 100 பிரபலங்களை ஆண்டுதோறும் பட்டியலிட்டு வருகிறது.

    அவ்வகையில், இந்த ஆண்டிற்கான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

    கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த ஷாருக் கானை பின்தள்ளி இந்த ஆண்டு சல்மான் கான் முதலிடம் பிடித்துள்ளார்.

    சினிமாவில் நடித்தது தவிர, பல்வேறு விளம்பரங்களில் தோன்றியதன் மூலம் கடந்த 1-10-2016 முதல் 30-9-2017 வரை சல்மான் கான் 232 கோடியே 83 இலட்சம் இந்திய ரூபாவை ஈட்டியுள்ளார்.

    இவருக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ள ஷாருக் கான் 170.05 கோடி ரூபா (இந்தியா) சம்பாதித்துள்ளார்.

    100.72 கோடி இந்திய ரூபா வருமானத்துடன் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி மூன்றாம் இடத்தில் உள்ளார்.

    2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற பின்னர் பேட்மின்டன் வீராங்கனை பிவி.சிந்துவின் வருமானம் 17 மடங்கு அதிகரித்துள்ளது. பல்வேறு விளம்பரங்களில் தோன்றியதன் மூலம் இவர் 57.25 கோடி இந்திய ரூபா வருமானம் ஈட்டியுள்ளார்.

    இந்த பட்டியலில் Top 10 வரிசையில் இடம்பிடித்துள்ள ஒரே பெண் என்ற வகையில், நடிகை பிரியங்கா சோப்ரா 68 கோடி ரூபா வருமானத்துடன் ஏழாவது இடத்தில் உள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஷாருக் கானை பின்தள்ளி சல்மான் கான் முதலிடம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top