• Latest News

    December 09, 2017

    சாய்ந்தமருது அல் ஹிலாலில் வருடாந்த பரிசளிப்பு விழாவும் கௌரவிப்பும்

    எம்.வை.அமீர்-
    சாய்ந்தமருதின் பிரபல்யமிக்க பாடசாலையான அல் ஹிலால் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் புலமைப்பரிசில் பரிட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் பெற்றோர் நலன் விரும்பிகளின் ஏற்பாட்டில் பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம். பைFஷால் தலைமையில் கூட்ட மண்டபத்தில் 2017-12-08  ஆம் திகதி இடம்பெற்றது.

    நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஷாம் கலந்து கொண்டார்.

    கௌரவ அதிதியாக கல்முனை கல்வி வலைய பிரதிக் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் கலந்து கொண்டதுடன் விஷேட அதிதிகளாக சாய்ந்தமருது கோட்ட கல்வி அதிகாரி ஐ.எல்.ஏ.றஹ்மான், ஏ.ஷஹ்றுன் (ஐ.எஸ்.ஏ) மற்றும் முன்னாள் அதிபர் ஐ.எல்.ஏ.மஜீட் ஆகியோர் கலந்துகொண்டனர். 

    அல் ஹிலால் வித்தியாலயத்தில் கல்விகற்ற மாணவி ஒருவரே மாவட்டத்திலும் மாகாணத்திலும் முதலிடத்தை பெற்றிருந்தார். குறித்த மாணவி விஷேடமாக கௌரவிக்கப்பட்டதுடன் இதே  பாடசாலையில் கல்வி கற்ற மாணவி ஒருவர் ஆங்கில எழுத்தாக்க போட்டியில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தை பெற்றிருந்தார்  இவரும் இந்நிகழ்வின்போது விஷேட கௌரவத்தைப் பெற்றார்.

    2016/2017 ஆண்டுகளில் புலமைப்பரிசில் பரிட்சைகளில் தேர்ச்சியுற்ற மாணவ மாணவிகளே இங்கு கௌரவிக்கப்பட்டனர்.

    நிகழ்வின்போது பிரதம அதிதி கௌரவ மற்றும் விஷேட அதிதிகள், பிரதி அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க அங்கத்தினர்கள் அவர்கள் ஆற்றிய சேவைகளுக்காக பாடசாலையால் கௌரவிக்கப்பட்டனர்.

    அதிதிகள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் நிறைந்திருந்த இந்நிகழ்வின்போது மாணவிகளின் கலைநிகழ்வுகள் சபையை மகிழ்வில் ஆழ்த்தியது.




     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சாய்ந்தமருது அல் ஹிலாலில் வருடாந்த பரிசளிப்பு விழாவும் கௌரவிப்பும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top