- வினோத் -
திருத்தணி அருகில் உள்ள முருக்கம்பட்டில் சக்தி பப்ளிக் பள்ளியில் விளையாட்டு தின விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோர்களின் முன்னிலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர் ஆகியோர்கள் சிறப்புரையாற்றும் போது மாவர்களுக்கு விளையாட்டுப் போட்டியின் முக்கியத்துவம் குறித்து உடல், மனம் ஆகியவை பக்குவபடுவதை குறித்து எடுத்துரைத்து பேசினார்.
இந்நிகழ்ச்சியில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் பள்ளியின் தாளாளரும், சிறப்பு விருந்தினரான வழக்கறிஞர் புருஷோத்தமன் ஆகியோர்கள் வழங்கினார்கள்.
இப்பள்ளி மாணவர்கள் 29 பேர் கடந்த மாதம் நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டியில் திருவள்ளுர் மாவட்டம் சார்பில் பரிசுகளை வென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:
Post a Comment