கடுமையான பனிப்பொழிவு காரணமாக ஜேர்மன் பிராங்பர்ட் விமான நிலையத்தில் 330 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் நான்கு வருடங்களில் இல்லாத அளவிற்கு கடுமையாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து முடங்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் வர்த்தக நகர விமான நிலையமான Frankfurt விமான நிலைய ஓடு பாதை முழுவதும் பனிக்கட்டிகளால் மூழ்கியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று (10.12.2017) மாலை 5 மணியளவில் சுமார் 330 விமானங்கள் ரத்து செய்துள்ளதாக விமான நிலைய செய்தி தொடர்பாளர் Fraport தெரிவித்திருந்தார்.
நாட்டின் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கும் குறைவாக செல்வதால் விமான சேவைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் விமான நிலைய இணையத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் விமான இருக்கைகளை முன்பதிவு செய்தவர்கள் வெப்பநிலையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் ஆன்லைனில் ஒருமுறை சோதனை செய்துவிட்டு விமான நிலையத்துக்கு பயணம் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment