பங்களாதேஸ் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக செயல்பட்டவர் முஷ்பிகுர் ரஹிம். இவரது தலைமையில் பங்களாதேஸ் கிரிக்கெட் வரலாற்று வெற்றிகளை பதிவு செய்தது.
இவரது தலைமையில் பங்களாதேஸ் அணி இங்கிலாந்து,இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை முதன்முறையாக வென்றுள்ளது.சமீபத்தில் பங்களாதேஸ் அணி தென்ஆப்பிரிக்கா சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் படுதோல்வியடைந்தது.மேலும் அணித்தலைவர் முஷ்பிகுர் ரஹிம் சிறப்பான வகையில் துடுப்பாடவில்லை என்று கூறப்பட்டது.
இதனால்,முஷ்பிகுர் ரஹிம் துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தும் வகையில் அவரை தலைவர் பதவியில் இருந்து பங்களாதேஸ் கிரிக்கெட் வாரியம் அதிரடியாக தூக்கியது.
அவருக்குப் பதிலாக சகலதுறை வீரர் சாஹிப் அல் ஹசனை அணித்தலைவராக நியமித்துள்ளது.சாஹிப் அல் ஹசன் டி20 அணி தலைவராகவும் செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment