• Latest News

    December 22, 2017

    ஐ.நாவின் மனித உரிமை விசாரணை அதிகாரி மியான்மருக்கு வர தடை

    .நாவின் மனித உரிமை விசாரணை அதிகாரி தங்கள் நாட்டிற்குள் நுழைய மியான்மர் தடை விதித்துள்ளது.

    மியன்மாரில் ரக்கைன் மாகாணத்தில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள் உட்பட, மியான்மரின் மனித உரிமைகள் குறித்து ஆய்வு நடத்துவதற்காக விசாரணை அதிகாரி யாங்ஹீ லீ ஜனவரி மாதம் மியான்மர் செல்ல இருந்தார்.

    அவர் தனது பணியைச் செய்யும் போது நடுநிலையாக இல்லாததால் மியான்மருக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது.

    ரக்கைனில் ஏதோ மோசமான செயல் நடக்கிறது என்பதை தனக்கு தடை விதிக்கப்பட்ட முடிவு காட்டுகிறது என யாங்ஹீ லீ கூறியுள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஐ.நாவின் மனித உரிமை விசாரணை அதிகாரி மியான்மருக்கு வர தடை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top