• Latest News

    December 11, 2017

    புலியை பார்த்து பூனை வரி போட்டுக் கொண்டது - அமைச்சர் மனோ கணேசன்

    ன்னி தேர்தல் தொகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிட நினைப்பது புலியை பார்த்து பூனை வரி போட்டுக் கொண்டதைப் போல இருப்பதாக  தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

    வன்னியில் உள்ள இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினைகளை அப்பிரதேச தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி தீர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
    நுவரெலியா - மஸ்கெலியா நகரில் நேற்று(11) இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த மனோ கணேசனிடம், வன்னி தேர்தல்  தொகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிடுகின்றமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
    கடந்த காலங்களில் அதிகாரம் மிக்க கட்சியாக விளங்கிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தற்போது அந்த அதிகாரங்களை முறையாக பயன்படுத்த தவறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: புலியை பார்த்து பூனை வரி போட்டுக் கொண்டது - அமைச்சர் மனோ கணேசன் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top