தேர்தலில் வாக்களிப்பதற்கு முழுமையாக முகத்தை மறைக்கும் புர்காவுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை தேர்தல் திணைக்களம் நிராகரித்துள்ளது.
வாக்களிப்பதற்கு முன்னதாக வாக்களிப்பு நிலைய பெண் அதிகாரிக்கு தனது அடையாளத்தை உறுதி செய்வதற்கு மாத்திரம் முகத்தை காண்பித்தால் போதும் என மேலதிக தேர்தல்ஆணையாளர் எம்.எம். முஹம்மத் தெரிவித்தார்.
வாக்களிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் தொடர்பில் தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ள விடயங்களை சிலர் தவறாக பிரசாரம் செய்வதாக குறிப்பிட்ட அவர் வாக்களிப் பதற்கு கருப்புக் கண்ணாடி அணிந்து வரவும் தலைக்கவசம் அணிந்துவரவும் தடைவிதிக்கப் பட்டுள்ளது.
அதனை மீறுவோர் வாக்களிப்பு நிலையத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
விமான நிலையத்தில் அடையாளத்தை உறுதி செய்ய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுக்கு முகத்தை காண்பிப்பது கட்டாயம். அதே போன்று அடையாள அட்டை பெறவும் முகத்தை காண்பிக்க வேண்டும்.
இதே போன்று தான் வாக்களிப்பின் போதும் புர்கா அணிந்துள்ள பெண்கள் முகத்தை காண்பிக்க வேண்டும்.இந்த விதியை சிலர் இனவாத ரீதியில் சித்தரித்து தேர்தலில் புர்க்காவுக்கு தடை என காண்பிக்க முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

0 comments:
Post a Comment