• Latest News

    April 14, 2018

    ஒரு முஸ்லிம் ஆளுநராவது நியமிக்கப்பட்டுள்ளாரா? - பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ


    மேல் மாகாண ஆளுனர் பதவியை அலவி மௌலானாவுக்கு வழங்கி, அவர் முஸ்லிம்களை கௌரவித்தார் என்பதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை இனவாதியாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்கு தான் ஞாபகம் ஊட்ட விரும்புதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.


    புதிய ஆளுனர் நியமனம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

    இந்த நாட்டில் இனவாதம் இன்று நேற்று வந்த ஒன்றல்ல. அதற்கு நீண்டதொரு வரலாறுண்டு. எமது ஆட்சிக்காலப்பகுதியில் இனவாதம் சற்று மேலோங்கியது. அதற்கு, நாம் ஒருபோதும் அங்கீகாரம் வழங்கவில்லை. எமது காலப்பகுதியில் இனவாதிகள் நின்ற வேகத்திற்கு, நாம் ஊசியளவு இடம் கொடுத்திருந்தாலும், நாடே சுடுகாடாக மாறியிருக்கும்.

    இவ்வரசாங்கத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் விடயங்களை, எமது ஆட்சிக்காலத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, எமது ஆட்சியின் அருமையை புரிந்துகொள்ள முடியும். தற்போது ஆளுநர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதில் ஒரு முஸ்லிம் ஆளுநராவது நியமிக்கப்பட்டுள்ளாரா? இந்த ஆட்சியமைந்த பிறகு எத்தனையோ தடவைகள் ஆளுநர்கள் மாறிவிட்டார்கள். ஒரு முஸ்லிம் ஆளுநராவது நியமிக்கப்பட்டுள்ளாரா?
    எமது ஆட்சிக்காலப்பகுதியில் மேல் மாகாண ஆளுநராக, சகலவிதமான அதிகாரங்களுடனும் அலவி மௌலானா இருந்தார். இலங்கையில் உள்ள மாகாணங்களில் மேல் மாகாணம் மிக முக்கியமானது. அதற்கு நாம் முஸ்லிம் ஒருவரை ஆளுநராக நியமித்திருந்தமையே, எமது இனவாதமற்ற அரசியல் போக்கை அறிந்து கொள்ள போதுமானதாகும்.
    தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற சபைகளில், எமது உதவியுடன் எத்தனையோ முஸ்லிம்கள் சபைத் தலைவர்களாகியுள்ளனர்.பல  சபைகளை பிரதானமாக சுட்டிக்காட்டலாம். ஐக்கிய தேசிய கட்சி முஸ்லிம்களின் பெருமளவான வாக்கை பெறுகின்ற போதும் அவர்களுக்கு எந்த விதமான கௌரவங்களை வழங்கவும் ஆர்வம் காட்டுவதில்லை.முஸ்லிம்களை வெறும் கிள்ளு கீரையாகவே பயன்படுத்தி வருகிறது என குறிப்பிட்டார்.[right_sidebar]
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஒரு முஸ்லிம் ஆளுநராவது நியமிக்கப்பட்டுள்ளாரா? - பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top