• Latest News

    May 20, 2018

    எடியூரப்பா ராஜினாமா:உச்ச நீதிமன்றம் தனது கடமையைச் செய்துள்ளது!

    கர்நாடக சட்டமன்ற தேர்தல் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தை பொறுத்தமட்டில், சரியான நேரத்தில் தன்னுடைய கடமையை, சரியான முறையில் செய்துள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று இரவு 7.15 மணிக்கு திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி. கர்நாடக தேர்தல் முடிவில், சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பாஜவை சேர்ந்த எடியூரப்பாவை, அம்மாநில கவர்னர் ஆட்சி அமைக்க அழைத்தார்.

    எடியூரப்பாவும் முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால், ஜனநாயக படுகொலையை, உச்ச நீதிமன்றம் பார்த்து கொண்டு இருக்காமல் தகுந்த பாடத்தை புகட்டி, நீதியை நிலைநாட்டியது. இதற்காக உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி. இந்த சம்பவத்தின் மூலம் ஒரு மாநில கவர்னர்கள், எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு தெளிவு கிடைத்துள்ளது. அதோடு கர்நாடக மாநில கவர்னருக்கு இது, ஒரு தகுந்த பாடம். முறையற்ற முறையில் செயல்பட்ட கர்நாடக கவர்னர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். கர்நாடகாவில் பாஜ, ஆட்சி அமைக்கப்போகிறது என்ற நம்பிக்கையில் தமிழக முதல்வரும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் போட்டி போட்டு கொண்டு, தங்களது வாழ்த்தை தெரிவித்தனர்.

    அதற்கு காரணம், மத்திய அரசின் மீதுள்ள பயம். இன்னும் சொல்லப்போனால் மோடியின் மீது, முதல்வர் எடப்பாடிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருக்கும் பயம், மற்றும் இந்த ஆட்சியில் அரங்கேறிவரும் ஊழல் தான். அந்த ஊழல் பயத்தின் காரணமாகத்தான், மத்திய அரசுக்கு ஜால்ரா தட்டி, அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கர்நாடக மாநிலத்தில் எந்தவொரு கட்சி ஆட்சி நடத்தினாலும், தமிழக மக்கள், குறிப்பாக  விவசாயிகள் நலன் என்று வரும்போது தமிழக காங்கிரஸ் தன்னுடைய குரலை உயர்த்தி, உரிமையை பதிவு செய்யும்.

    மேலும், எடியூரப்பா ராஜினாமா செய்திருப்பது, மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. ஆனால், தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தாமல், அவையில் இருந்து அவரும், அவர் சார்ந்த எம்எல்ஏக்களும் வெளியேறியது நமது நாட்டை அவமானப்படுத்தும் செயல். உச்ச நீதிமன்றத்தை பொறுத்தமட்டில், சரியான நேரத்தில் தன்னுடைய கடமையை, சரியான முறையில் செய்துள்ளது. இதனால், இந்திய ஜனநாயகத்துக்கு மிக பெரும் வெற்றி கிடைத்துள்ளது. இந்த சம்பவம் கர்நாடக மாநில கவர்னருக்கு மட்டுமின்றி, மற்ற மாநில கவர்னர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எடியூரப்பா ராஜினாமா:உச்ச நீதிமன்றம் தனது கடமையைச் செய்துள்ளது! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top