இன்று நாடு பூராகவும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்திலேயே பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்களினதும், ஆசிரியர்களினதும் வரவு மிகவும் குறைவாக இருந்ததன.
2019 ஏப்ரல் 22ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும், உயிர்த்த ஞாயிறு அன்று தேவாலயங்களிலும், ஹோட்டல்களிலும் தற்கொலை தாக்குதல்கள் நடைபெற்றன. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி மே 06ஆம் திகதி பாடசாலைகளை இரண்டாம் தவணைக்காக ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்தது.
இரண்டாம் தவணை கற்றல் - கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக தரம் 06 தொடக்கம் உயர்தர வகுப்புக்களை வரையான வகுப்புக்களை மே 06ஆம் திகதியும், முதலாம் தரம் தொடக்கம் 05ஆம் தரம் வரையான வகுப்புகளை மே 13ஆம் திகதி ஆரம்பிக்குமாறும் கல்வி அமைச்சு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதற்கமைய இன்று 06ஆம் தரம் முதல் உயர்தரம் வரையான மாணவர்களுக்குரிய இரண்டாம் தவணை கற்றல் - கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது.
பாடசாலைகளில் மிகவும் குறைவான மாணவர்களே வருகை தந்ததாக பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவித்துள்ளார்கள். பெரும்பாலான பாடசாலைகளில் சுமார் 10 சத வீதத்திற்கும் குறைவான மாணவர்களே வருகை தந்திருந்தார்கள். அத்தோடு, ஆசிரியர்களின் வரவும் குறைவாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டன.
இதே வேளை, இன்று பாடசாலைகளைச் சூழ பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள்.
பாடசாலைகளின் முன்னால் உள்ள வீதிகளின் ஊடான போக்குவரத்துக்களும் தடைசெய்யப்பட்டிருந்தது. பாடசாலைகளின் முன் நுளைவாயிலில் மாணவர்களின் புத்தகப் பைகள் யாவும் பாதுகாப்பு தரப்பினரின் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அத்தோடு, ஆசிரியர்கள், ஏனைய ஊழியர்களின் பைகளும் கடும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதே வேளை, பாடசாலைகளின் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இம்மாதம் முதலாம் திகதி முதல் 05ஆம் திகதி வரை தனியார் மற்றும் அரச பாடசாலைகளில் பாதுகாப்பு தரப்பினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதே வேளை, முஸ்லிம் பாடசாலைகள் ரமழான் நோன்பின் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக ஜுன் மாதம் 10ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

0 comments:
Post a Comment