ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியின் ஜனாதிபதி
வேட்பாளராக சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டுள்ளதால், ராஜபக்ச தரப்பினர்
கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக அரசியல் தரப்புத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
சஜித் பிரேமதாச சம்பந்தமான எவ்விதமான சரியான குற்றச்சாட்டையும் முன்வைக்க முடியாததே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நேற்று ஒழுங்கு செய்திருந்த
வர்த்தகர்களின் மாநாட்டில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த
ராஜபக்ச, சஜித் பிரேமதாசவின் தந்தையான ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தை
நினைவுகூர்ந்து பேசியுள்ளார். இதனால், சஜித் பிரேமதாசவுக்கு எவரும்
வாக்களிக்க மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இது
தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அரசியல் நோக்கர்கள், ரணசிங்க பிரேமதாச
காலத்தில் நடந்த ஆட்களை டயரில் போட்டு எரியூட்டியது நினைவிருக்கும் மகிந்த
ராஜபக்சவுக்கு அவரது ஆட்சிக்காலத்தில் நடந்த வெள்ளை வான், காணாமல் போன
சம்பவங்கள், ஆட்கடத்தல் மற்றும் கொலைகளை போர் முடிந்த பின்னரும் நடந்தது
என்பது நினைவில் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.
1988-89-90 ஆம்
ஆண்டுகளில் நாட்டில் இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடைபெற்ற
முக்கியமான காலம் எனினும் ராஜபக்ச காலத்தில் நடந்த சம்பவங்கள் போருக்கு
பின்னர் நடந்தவை.போருக்கு பின்னர் ஜனநாயகத்தை பாதுகாத்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு
பதிலாக சமூகத்தை அச்சத்திற்கு உள்ளாக்கி, சர்வாதிகார குடும்ப ஆட்சியை
ராஜபக்சவினர் நடத்தினர். ஊடக நிறுவனங்களை தீயிட்டமை, ஊடகவியலாளர்களை கொலை
செய்தமை போன்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கும் கோத்தபாய ராஜபக்சவை
வேட்பாளராக அறிவித்ததமையானது நாட்டின் முழு சமூகத்திற்கு செய்த அவமதிப்பு
எனவும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments:
Post a Comment