• Latest News

    October 31, 2019

    புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க சந்திரிகா பண்டாரநாயக்க, குமார வெல்கம ஆகியோர் முடிவு

    முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவரும், மத்துகம தொகுதி அமைப்பாளராக இருந்த பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம ஆகியோர் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க
    முடிவு செய்துள்ளனர்.

    எதிர்வரும் நவம்பர் 05ம் திகதி சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெற உள்ள விஷேட மாநாட்டில் இந்த தீர்மானத்தை அவர்கள் அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
    முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் அன்றைய தினம் 02 மணிக்கு ஆரம்பமாக உள்ள இந்த மாநாட்டில் ஶ்ரீலங்கா சதந்திர கட்சியின் அமைப்பாளர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச உறுப்பினர்கள் உட்பளட பெருமளவானோர் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.நேற்று புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி வேட்பாளர் சங்கத்தின் கித்றிசி ஹெட்டியாரச்சி கருத்து தெரிவிக்கும் போது,
    கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலின் போது ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் 9000 வேட்பாளர்கள் போட்டியிட்டதாகவும், அவர்கள் எவருக்கும் தெரியாமல் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்க சுதந்திர கட்சியின் தலைமை முடிவெடுத்துள்ளதாகவும் கூறினார்.
    இந்த நிலமையால் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவாளர்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளதாகவும், இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 07 இலட்சம் வாக்குகளை பெற்றுக் கொடுக்க தமது குழு செயற்படும் என்றும் அவர் கூறினார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க சந்திரிகா பண்டாரநாயக்க, குமார வெல்கம ஆகியோர் முடிவு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top