புத்தளத்தில் இயங்கி வந்த இரகசிய சித்திரவதை முகாம் தொடர்பில் பொலிஸார் பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
குற்றச்
செயல்களில் ஈடுபடும் கும்பலினால் நீண்ட காலமாக நடத்தி செல்லப்படும்
சித்திரவதை முகாம் தொடர்பில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது இந்த முகாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய
மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 12 கிராம் ஹெரோயின்
போதைப்பொருளுடன் மாதுஷான் எனப்படும் ஓழு மரா என்ற போதைப்பொருள் வர்த்தகர்
கைது செய்யப்பட்டார்.
அவரின் கையடக்க தொலைபேசியை சோதனையிடும் போது சித்திரவதை முகாமின் காணொளிகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சித்திரவதை
முகாமில் இளைஞர்களை சித்திரவதை செய்து சிறைப்படுத்தும் காட்சிகளும்
தாக்குதலுக்குள்ளானவர்கள் விழுந்து கிடக்கும் காட்சிகளுடன் அடங்கிய
காணொளிகள் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஓழு
மரா கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர்
நீண்ட காலமாக வர்த்தகர்களிடம் கப்பம் பெற்ற ஒருவராகும்.எப்படியிருப்பினும் தற்போது சிறைப்படுத்தப்பட்டுள்ள ஓழு மராவின் கும்பலை தேடி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments:
Post a Comment