• Latest News

    November 01, 2019

    வைத்தியசாலைக்கு காணியை அன்பளிப்புச்செய்த, சகோதரர்களில் ஒருவர் வபாத்

    கண்டி தேசிய வைத்தியசாலைக்கு சுமார் ஒன்றரை ஏக்கர் காணியை வக்பு செய்த ஐந்து சகோதரர்களில் ஒருவர் இன்று மரணமடைந்தார்.
     
    கடந்த வாரம் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு கண்டி முஸ்லிம் ஹோட்டலின் உாிமையாளர்களான ஐந்து சகோதரர்கள்  சுமார் ஒன்றரை ஏக்கர் காணியை அல்லாஹ்வின் போில் வக்பு செய்தார்கள்.

    இவர்களில் ஒருவரான   ரபீக் ஹாஜியார் என்று அழைக்கப்படும் சகோதரரே இன்று   காலமானார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)
     இவரது ஜனாஸா நாளை காலை 8 மணிக்கு அணிவத்தை  வீட்டில் இருந்து எடுத்து செல்லப்பட்டு காலை 8 மணி முதல்  காலை 10 மணி வரை   கண்டி கட்டுக்களை ஜும்மா பள்ளியில் பொது மக்கள் பார்வைக்காக  வைக்கப்பட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 10 மணிக்கு  அன்னாாின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும்.
     தகவல் சித்திக் ஹாஜி 
    கண்டி பள்ளிவாயல்கள் சம்மேளன தலைவர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வைத்தியசாலைக்கு காணியை அன்பளிப்புச்செய்த, சகோதரர்களில் ஒருவர் வபாத் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top