முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தனக்கும் குடும்பத்திற்கும்
கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
சஜின் டி வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கோட்டை பகுதியில் நேற்று
நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஆதாரத்துடன் இந்தத் தகவலை சஜின் டி
வாஸ் குணவர்த்தன வெளியிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுனவை சேர்ந்த
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது மனைவிக்கு அழைப்பு மேற்கொண்டு,
பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் சிந்திக்குமாறு அச்சுறுத்தினார்.
சில
நாட்கள் கழித்து, அம்பலாங்கொடையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஸ்ரீ லங்கா
சுதந்திரக் கட்சி குறித்தும் மொட்டின் எதிர்காலம் குறித்தும் கருத்து
தெரிவித்தேன்.
குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் மீண்டும் தனது
மனைவிக்கு அழைப்பு ஏற்படுத்தி தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும்,
பிள்ளைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்க
சொன்னதாகக் குறித்த நபர் எச்சரித்ததாக சஜின் டி வாஸ் குணவர்தன
தெரிவித்துள்ளார்.
நான் 17 வருடங்கள் மஹிந்த தரப்பிலிருந்தேன். 17
வருடங்களாக அந்தத் தரப்பிற்கு சேவையாற்றினேன். பின்னர் அங்கிருந்து
வெளியேறி சுதந்திரமாக அரசியலில் ஈடுபடுகின்றேன். இதுவே உண்மை.
கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட ஆடியோ ஆதாரத்தையும் சஜின் வாஸ் ஊடகவியலாளர்களுக்கு போட்டுக் காட்டினார்.

0 comments:
Post a Comment