• Latest News

    November 06, 2019

    புதிய ஜனாதிபதி யார்? சோதிடர்கள் தொிவிப்பு

    எதிர்வரும் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச நிச்சயம் வெற்றி பெறுவார் என சுயாதீன சோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின்போது அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

    தொடர்ந்தும் அவர்கள் குறிப்பிடுகையில்
    சுயாதீன சோதிடர்களான தாங்கள் கருத்துக்களை வெளியிடும் உரிமையை தடுக்கும் விதத்தில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்மீது பழி சுமத்தும் விதத்தில் கருத்துத் தெரிவித்துள்ளதாக பிரபல சோதிடர் கே. ஏ. யூ சரத்சந்திர இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
    கடந்த வார இறுதியில் வாரப் பத்திரிகையொன்றில் பிரசுரமான சோதிடர் பக்கத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெற்றியீட்டுவார் என்று விஞ்ஞானபூர்வமாக கருத்து வெளியிட்டதை விமர்சித்திருக்கும் வீரவன்ச, கம்மன்பில போன்றோர் இதற்காக நாம் ஒரு கோடி ரூபா வீதம் பெற்றுக்கொண்டதாகப் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.
    இந்த உண்மைக்குப் புறம்பான கருத்து சோதிடர்களான எம்மை அவமானப்படுத்துவதாகும். இது தொடர்பில் நாம் நீதிமன்றத்தை நாட முடிவுசெய்துள்ளோம் என சுயாதீன சோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.
    https://www.tamilwin.com/politics/01/230507?ref=home-latest
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: புதிய ஜனாதிபதி யார்? சோதிடர்கள் தொிவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top