முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் கட்சி உறுப்புரிமையை
ரத்து செய்யும் தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியும், சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவிற்கு சந்திரிக்கா கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
எதிர்வரும்
ஜனாதிபதி தேர்தல் வரையில் சந்திரிக்காவின் கட்சி உறுப்புரிமையை ரத்து
செய்யும் நடவடிக்கையை ஒத்தி வைப்பது என நேற்றைய தினம் கூடிய கட்சியின்
மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.
மேலும், சந்திரிக்கா தலைமையில்
“நாம் ஸ்ரீலங்கா” என்னும் தொனிப்பொருளில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற
கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பணி நீக்கப்படமாட்டார்கள் என
தெரிவிக்கப்படுகிறது.
அவர்களுக்கு பதிலீடாக கோத்தபாய ராஜபக்சவிற்கு
ஆதரவாக செயற்படக் கூடிய பதில் தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்படுவர் என
கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.
சுதந்திரக் கட்சியின்
பதில் தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தலைமையில் நேற்றைய தினம்
கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment