• Latest News

    November 06, 2019

    சஜித் பிரேமதாஸவுடன் இணைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்

    ஜனாதிபதி தேர்தலுக்கான நாட்கள் அண்மித்துள்ள நிலையில் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும், கொழும்பு மாநாகர சபை உறுப்பினருமான உமாசந்திர பிரகாஸ் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து, ஐக்கிய தேசிய முன்னணியில் இன்று இணைந்துள்ளார்.

    அதேபோன்று தமிழ் தேசிய முற்போக்கு கட்சியின் செயலாளர் ஆறுமுகம் ஜோன்சன் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.

    ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிக்கொத்தவில் வைத்து கட்சியின் தேர்தலுக்குப் பொறுப்பான திஸ்ஸ அத்தநாயக்கவினால் இவர்கள் இன்று வரவேற்கப்பட்டனர்.

    ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷக்கு ஆதரவு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சஜித் பிரேமதாஸவுடன் இணைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top