இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் பணியாளர் கடத்தப்பட்டதாக
வெளியான தகவல்களில் உண்மையில்லை என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க
தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் பணியாளர் கடத்தப்படவில்லை எனவும் அவருக்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கெலிஓயா பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்…
சுவிட்சர்லாந்து
தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சந்தர்ப்பத்தில் அவ்வாறான
எவ்வித சம்பவங்களும் இடம்பெறவில்லை. குறித்த பெண் பயணம் செய்த இடங்கள்
பற்றிய விபரங்கள் முழுமையான அளவில் திரட்டப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும்,
இந்த தகவல்களுக்கு மேலதிகமாக ஏதேனும் கடத்தல் சம்பவமொன்று
இடம்பெற்றிருந்தால் அது குறித்து விசாரணை நடாத்தி குற்றவாளிகளை தண்டிக்க
குறித்த பெண் பணியாளர் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அவ்வாறு ஒத்துழைப்பு வழங்கினால் பூரண அரச பாதுகாப்பு வழங்கப்படும்.
குறித்த பெண் பணியாளர் சட்டவிரோதமான முறையில் சுவிட்சர்லாந்துக்கு செல்ல முடியாது, அது இலங்கை சட்டங்களுக்கு முரணானது.
விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி விட்டு அதன் பின்னர் தேவை என்றால் குறித்த பெண் சுவிட்சர்லாந்து செல்ல முடியும்.
இந்தப்
பெண் நடத்திய நாடகத்தின் ஊடாக, புதிய அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி
கோட்டாபய ராஜபக்சவிற்கும் இழிவுபடுத்த முயற்சிக்கப்பட்டது, எனினும் அந்த
முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் அரசாங்கம் எமக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் செயற்பட்டிருக்காது என நம்புகின்றேன் என எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment