நாடு ஒரு இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர் கொண்டுள்ள கால கட்டத்தில்,
புலனாய்வுத் துறையின் மேலதிகாரியாக பிரிகேடியர் சுரேஷ் ஸாலேஹ்வை ஜனாதிபதி
கோதாபய ராஜபக்ஷ நியமித்தமை தவறு என்று ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற
உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கின்றமை கவலை தரும் விடயமாகும்.
தான் ஜனாதிபதியானால் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவையே பாதுகாப்பிற்கு
பொறுப்பாக நியமிப்பேன் என்று ஐக்கிய ஜனநயாக கூட்டமைப்பு வேட்பாளர் சஜித்
கூறியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஒட்டு மொத்த முஸ்லிம் கட்சிகளும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா 2010 ஆம்
ஆண்டு அன்னம் சின்னத்தில் களத்தில் குதித்த போதும் தற்போதும் அதே ஐக்கிய
தேசியக் கூட்டணியில் பங்காளிகளாக இருக்கின்ற யதார்த்தத்தை உணராமலே அல்லது
அவர்களின் உணர்வுகளை மதிக்கமலேயே இவ்வாறான கருத்தினை அவர்
முன்வைத்திருக்கிறார்.
ஒரு சிறிய குழுவின் தீவிரவாத அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக ஒட்டு
மொத்த சமூகத்தையும் அந்த சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகளையும்
பிரதிநிதிகளையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கச் செய்கின்ற கருத்து
வெளியீட்டை அவர் மேற்கொண்டிருக்கின்றமை கண்டிக்கப் பட வேண்டிய விடயமாகும்!
அவர் சொல்லுகின்ற இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு ஒட்டு மொத்தத்த இலங்கை
முஸ்லிம்களும் எதிரானவர்கள் என்கிற உண்மையை நாட்டு மக்கள் அறிவார்கள்,
முஸ்லிம் அரசியல் சிவில் சன்மார்க்கத் தலைமைகளும் பொதுமக்களும் அதனை
நிரூபித்துள்ளார்கள்.
மேற்படி உண்மையை அதிபர் கோதாபய ராஜபக்ஷ உணர்ந்து செயற்படுவதாகவே நாங்களும்
நம்புகிறோம், அத்தகைய முதிர்ச்சியின் வெளிப்பாடாகவே புலனாய்வுத் துறை
நிபுணத்துவமிக்க மேலதிகாரி பிரிகேடியர் சுரேஷ் ஸாலேஹ்வை இனமத வேறுபாடுகளைப்
பார்க்காது அந்த துறைக்கு பொறுப்பாக நியமித்துள்ளார்.

0 comments:
Post a Comment