• Latest News

    December 04, 2017

    தாழமுக்க நிலை எதிர்வரும் 24 மணித்தியால காலப்பகுதியில் வலுவடையக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்

    லங்கைக்கு 1300 கிலோமீற்றர் தொலைவில் கிழக்கு திசை வங்காள விரிகுடா கடற்பரதேசத்தில் நிலவும் தாழமுக்க நிலை எதிர்வரும் 24 மணித்தியால காலப்பகுதியில் வலுவடையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
    எதிர்வரும் 3-4 தினங்களில் இந்த தாழமுக்க தாழ்வு நிலை இந்த கட்டமைப்பின் மேற்குப்பகுதியில் வடமேல் திசையை நோக்கி நகர்ந்து மத்திய வங்காள விரிகுடாவில் கடற்பிரதேசத்தின் ஊடாக வடக்கு தமிழ்நாடு – தெற்கு ஆந்திரா பிரதேச கரையை நோக்கி நகரக்கூடும்.

    இதற்கமைவாக எதிர்வரும் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் இலங்கைக்கு கிழக்கு திசையில் இந்த கட்டமைப்பு நாட்டிற்கு அருகாமையில் நகரக்கூடும். எதிர்வரும் சில தினங்களில் விசேடமாக நாளை முதல் வங்காள விரிகுடா கடற்பிரதேசத்தலும் நாட்டை சுற்றியுள்ள கடற்பிரதேசத்திலும் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் . மேலும் வங்காள விரிகுடா கடற்பிரதேசத்தில் காற்றின் வேகம் 90 கிலோமீற்றர் முதல் 100 கிலோமீற்றர் வரையிலும் நாட்டை சுற்றியுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிரதேசத்தில் காற்றின் வேகம் 70 முதல் 80 கிலோமீற்றர் வரையிலும் நாட்டிற்குள் விசேடமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் 50 முதல் 60 கிலோமீற்றர் வரையிலும் அதிகரிக்ககூடும்

    தாழமுக்கதாழ்வு நிலைற்கு அமைவாக இந்த காற்றின் வேகம் மேலும் அதிகரிக்ககூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

    வங்காள விரிகுடா கடற்பிரதேசத்தில் அடிக்கடி கடும் காற்றும் கடல் கடும் கொந்தளிப்புடனும் இருக்கக்கூடும் என்று திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

    இதனால் கடற்பிரதேசத்தில் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் அவதானமாக செயற்படவேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தாழமுக்க நிலை எதிர்வரும் 24 மணித்தியால காலப்பகுதியில் வலுவடையக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top