ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் தேசிய பட்டியல் தயாரிப்பு பணிகள்
பெரும்பாலும் முடிவடைந்துள்ளதாகவும், அவர்கள் அதனை இரகசியமாக
வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வெளியாகியுள்ள தகவல்களுக்கு அமைய ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவின்
சேதிய பட்டியலில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், சட்டத்தரணி சாகர காரியவசம்,
ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித்
நிவாட் கப்ரால், கெவிந்து குமாரதுங்க, விமல் கீகனகே ஆகியோரின் பெயர்கள்
உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன் வியத் கம அமைப்பின் இரண்டு பேரின் பெயர்களும் தேசிய பட்டியலில்
உள்ளடக்கப்பட்டுள்ளன. கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகளுக்கு
நான்கு பிரதிநிதிகளுக்கு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை
வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment