• Latest News

    August 03, 2025

    ஹமாஸின் அதிரடி அறிவிப்பு

     


    சுதந்திர பாலஸ்தீன அரசு நிறுவப்படும் வரை ஆயுதங்களை கைவிடப்போவதில்லை என்று ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

    காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முக்கிய இஸ்ரேலிய கோரிக்கைக்கு, இந்த பதிலை ஹமாஸ் வெளியிட்டுள்ளது.முன்னதாக, காசா போரில் 60 நாள் போர் நிறுத்தத்தை உறுதி செய்வதையும், பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தையும் நோக்கமாகக் கொண்ட ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான மறைமுக பேச்சுவார்த்தைகள் கடந்த வாரம் முடிவின்றி இடைநிறுத்தப்பட்டன.இந்தநிலையில், இஸ்ரேலால் இராணுவ ரீதியாக பாதிக்கப்பட்ட ஹமாஸ் அமைப்பு, ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட சுதந்திரமான, முழு இறையாண்மை கொண்ட பாலஸ்தீன அரசு நிறுவப்படும் வரை ஆயத எதிர்ப்பை கைவிடமுடியாது என்று தெரிவித்துள்ளது.

    மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் ஹமாஸை நிராயுதபாணியாக்குவதை இஸ்ரேல் ஒரு முக்கிய நிபந்தனையாக கூறி வரும் நிலையில், ஹமாஸ் தமது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    Next
    This is the most recent post.
    Older Post
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஹமாஸின் அதிரடி அறிவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top