• Latest News

    April 24, 2020

    அம்பாறையில் 20 கடற்படையினர் தனிமைப்படுத்தலில்! மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஒருவர்

    கொழும்பில் இருந்து அம்பாறைக்கு விடுமுறையில் சென்றிருந்த 21 கடற்படையினரில் 20 பேர் அவர்களின் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அம்பாறை பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரசங்க சேரசிங்க தெரிவித்துள்ளார்.

    இவர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியமைக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, 1990 அம்பியூலன்ஸ் வண்டியின் மூலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக உகண சுகாதார அதிகாரி நிரோஷன் லியனகே தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து இந்த கடற்படை வீரர் தங்கியிருந்த வீடு கிருமி தொற்று நீக்கப்பட்டதுடன் வீட்டில் இருந்தவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

    அதேவேளை இந்த கடற்படை வீரர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களை கண்டறிய சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    Tamilwin.com
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அம்பாறையில் 20 கடற்படையினர் தனிமைப்படுத்தலில்! மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஒருவர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top