• Latest News

    April 24, 2020

    கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை இம்மாதம் இறுதியில்

    (இரா.செல்வராஜா)
    கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை இம்மாதம் இறுதியில் வெளியிட எதிர்பார்த்திருப்பதாக பரீட்சைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் நாயகம் பிரணவதாசன் தெரிவித்தார்.

    கடந்த டிசம்பர் மாதம் நடைப்பெற்ற கா.பொ.த சாதாரண பரீட்சையில் 7 இலட்சத்து 17 ஆயிரத்து 7 பேர் தோற்றியிருந்தனர்.

    இந்நிலையில் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதி மதிப்பீட்டு நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

    நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் , குறுகிய அளவான உத்தியோகஸ்தர்களை பயன்படுத்தி பெறுபேறுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இதேவேளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கா.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 ற்கான புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒரு போதும் ஒத்திவைக்கமாட்டாது என்றும் கல்வி அமைச்சின் வட்டாரம் தெரிவிக்கின்றது.
    Virakesari
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை இம்மாதம் இறுதியில் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top