கொரோனாவுக்கு அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,110 பேர் உயிரிழந்தனர்.30,713 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து
பரவத்துவங்கிய கொரோனா வைரஸ், ஐரோப்பியா, அமெரிக்காவில் அதிக உயிர்பலி
வாங்கி வருகிறது. ஐரோப்பாவில் பலி எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ள நிலையில்,
அமெரிக்காவில் தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்து வருவது சோகத்தை
ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2,110 பேர்
பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 50 ஆயிரத்து 243 ஆக உயர்ந்தது.
புதிதாக 30,713 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதையடுத்து மொத்த பாதிப்பும் 8
லட்சத்து 86 ஆயிரத்து 709 பேராக உயர்ந்துள்ளது. இதுவரை 85,922 பேர்
கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

0 comments:
Post a Comment