• Latest News

    April 24, 2020

    கொரோனா தீவிரமடைகிறது! சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடிக்கவில்லை என்றால் கைது செய்யபடலாம் - பிரதி பொலிஸ் மா அதிபர்

    ஒருவருக்கு உடலில் அதிகமான வெப்பநிலை அதிகமாக இருந்தால் அது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் அல்லது சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹான தெரிவித்துள்ளார்.

    குறிப்பிட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டிருந்தாலும் சுகாதார ஆலோசனைகளுக்கமைய செயற்படுமாறு அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    “ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது முக்கியமாகும். போக்குவரத்து சேவை வழங்குனர்கள் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைக்களுக்கமைய செயற்படுங்கள் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

    குறிப்பிட்ட அளவிற்கு மேல் பயணிகளை ஏற்ற வேண்டாம். பயணிகள் பேருந்தில் ஏறிய பின்னர் சமூக இடைவெளியை பின்பற்ற முடியவில்லை என்றால் அடுத்த பேருந்திற்கு காத்திருங்கள்.

    அலுவலகங்களில் தெரிவு செய்யப்பட்டுள்ள ஊழியர்களை ஈடுபடுத்தி கொள்ளுங்கள். உடலில் உஷ்ணம் அளவிடும் இயந்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். உடலில் வெப்ப நிலை அதிகமாக இருந்தால் பொலிஸாரிடம் அல்லது சுகாதார அதிகாரிகள் அறிவிக்கவும்.

    சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடிக்கவில்லை என்றால் கைது செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

    இலங்கையில் இதுவரை 368 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் மாத்திரம் 38 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கொரோனா தீவிரமடைகிறது! சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடிக்கவில்லை என்றால் கைது செய்யபடலாம் - பிரதி பொலிஸ் மா அதிபர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top