• Latest News

    April 22, 2020

    பண்டாரநாயக்கபுர மாவத்தையில் மாத்திரம் 59 கொரோனா நோயாளிகள்

    கொழும்பு-12, பண்டாரநாயக்கபுர மாவத்தையில் மாத்திரம் 59 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    குறித்த பகுதியில் அண்மையில் கொரோனா தொற்றுக்குள்ளாக பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து அந்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இதுவரையில் 59 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    அத்துடன் குறித்த பிரதேசத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் இதுவரையில் 5 பேர் கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார்.

    இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினை ஒழிப்பதற்கு அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வதனால் சுகாதார ஆலோசனைகளை உரிய முறையில் பின்பற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இந்த தொற்றில் இருந்து தப்புவதற்கு முழுமையான ஆதரவினை வழங்குமாறு பொது மக்களிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பண்டாரநாயக்கபுர மாவத்தையில் மாத்திரம் 59 கொரோனா நோயாளிகள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top